கீழே கிடந்த ரூ.10000! காவல் துறையிடம் ஒப்படைத்த சர்வர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
Server - 2026

கீழே கிடந்த 10 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டல் சர்வரை பாராட்டி சன்மானம் டிஎஸ்பி சன்மானம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ராமு வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி வேலூரில் பிரபலமான மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. அப்போது யாரோ ஒரு நபர் வேலூர் சிஎம்சி கண்மருத்துவமனை அருகே 10 ஆயிரம் ரூபாயை விட்டுசென்றுள்ளார்.

அவ்வழியாக சென்ற ஓட்டல் சர்வர் ராமு கீழே கிடந்த 100 ரூபாய் தாள்கள் கொண்ட 10 ஆயிரம் ரூபாயை வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து ஓட்டல் சர்வரின் இந்த நேர்மையை பாராட்டும் விதமாக வேலூர் பொறுப்பு DSP மகேஷ், ராமுவை நேரில் அழைத்து பாராட்டி 500 ரூபாய் சன்மானம் வழங்கியுள்ளார்.

மேலும் 10 ஆயிரம் ரூபாய் பணம் யாருடையது என இதுவரை தெரியததால், பணத்தை தவறவிட்டவர்கள் உரிய ஆவணத்தோடு தெற்கு காவல் நிலையம் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் படி காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.