நான் கிறித்துவனா…? அக்கா கிறிஸ்துவர் என்று அவர் இறந்த பின்னர் தான் தெரியும்: திருமாவளவன்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
thirumavalavan
thirumavalavan

என்னை கிறிஸ்துவர் என்று விமர்சிக்கிறார்கள். உண்மையில் என் அக்கா கிறிஸ்துவர் என்பதே அவர் இறந்த பிறகுதான் எனக்கே தெரியும் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அதிக தொகுதிகள் கேட்டு வந்தாலும், கடைசியில் 6 தொகுதிகளைத்தான் ஒதுக்கியது திமுக.

திருவள்ளூவருக்கு பூணூல் போட்ட படம்தான் தொடக்க காலங்களில் இருந்தது. பூணூலை தூக்கி ஏறிந்துவிட்டு புது வடிவம் தந்தவர் கருணாநிதி. ஆனால், பாஜகவினர் மீண்டும் திருவள்ளுவருக்கு காவி அடித்து பூணுல் போடுகிறார்கள் என்று ஆவேசப்பட்ட திருமா,

கிறிஸ்துவர் என்று என்னை விமர்சிக்கிறார்கள். உண்மையில் என் அக்கா இறந்தபிறகுதான் அவர் கிறிஸ்தவர் என்பதே எனக்கே தெரியும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.