பாதுகாப்பான உறவை வலியுறுத்தும் பள்ளிகள்! வைக்கப்பட்ட ஆணுறை இயந்திரம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
condom machine - 2026

ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் கடுமையாக ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது, அங்கு உயர்நிலைப்பள்ளிகளில் ஆணுறை வழங்கும் இயந்திரங்களை கொண்டுள்ளன. தற்போது 96% இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது., என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன் பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கும் விதமாக மற்றும் டீன்ஏஜ் கர்ப்பத்தின் அபாயத்தை குறைக்கவும், பிரான்ஸ் பள்ளிகள் ஆணுறைகளை வினியோகிக்கும் இயந்திரங்களை பள்ளிகளில் வைத்துள்ளன அரசின் இந்த முடிவுக்கு பள்ளி நிர்வாகங்கள் மற்றும் சில பிரிவுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

1992 இல் பிரான்சில் முதல் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. ஆனால், இதனை கத்தோலிக்க தேசத்தில் பலரும் ஆதரித்தனர்.

தற்போது. பிரான்சில் 96% அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியை பெறும் தனியார் பள்ளிகளில் ஆணுறை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன., என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இளம் தலைமுறையின் பாலியல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரான்ஸ் நாடு செயல்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் பொது பள்ளிகளிலும் இந்த ஆணுறை விநியோகம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.