‘போலி திராவிடத்தை வேரறுப்போம்'”: ராஜபாளையம் பகுதியில் நோட்டீஸ் விநியோகம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை மதுரை லைஃப் ஸ்டைல்
rajapalayam hindu votes - 2026

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தமிழர் சிந்தனைக் கழகம் சார்பில் ”போலி திராவிடத்தை வேரறுப்போம்! ஹிந்து சக்தியை இவர்களுக்கு உணர வைப்போம்! என்ற முழக்கத்துடன் நோட்டிஸ்கள் விநியோகிக்கப்பட்டன

அந்த நோட்டீஸில்…
வாக்குப் போடும் முன் சற்று சிந்தியுங்கள்! ராஜபாளையம் நகரில் தென்காசி சாலையில் நம் நகரை காக்கும் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலுக்கு எதிரே தி.க.,வினரால் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள ஈவேரா சிலையில் எழுதப்பட்டுள்ள வாசகத்துக்கு திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் பதில் என்ன?

ஹிந்துக்களே சிந்திப்போமா! ஹிந்து மதம் ஒழிந்தால் தான் சாதி ஒழியும்… என்று எழுதியிருக்கிறார்கள்! மற்ற மதத்தையும் இதுபோல திகவினரால் எழுதமுடியுமா??

  • இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என சொல்பவர்களின் பின்னணி என்ன?
  • இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் பின் ஏன் இந்து மதத்தினரிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள்?
  • தர்மத்தை ஒழிக்க முற்படுபவர்களுக்கா நமது வாக்கு?
  • ராஜபாளையம் ஓர் ஆன்மீக பூமி! எண்ணற்ற சித்தர்கள் ஜீவசமாயாக நமக்கு அருள்கின்ற பூமி! இப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இந்து மதத்தை ஒழிப்போம் என போலி வேஷம் போடும் கும்பல்களை காவல்துறை கைது செய்யாதது ஏன்?
  • சட்டவிரோத ஈவேரா சிலையை வருவாய்த்துறை அகற்றாதது ஏன்?
  • இதற்கு திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் பதில் என்ன?

ஆன்மீகத்தை போற்றுகிறவர்களுக்கே வாக்களிப்போம் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது!

rajapalayam hindu votes1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.