கொரோனா: ஸ்ரீவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் காலமானார்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
madhava rao srivilliputhur cong - 2026

கொரோனா தாக்கத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முதல்முறையாகப் போட்டியிட்ட பிஎஸ்டபிள்யு மாதவராவ், மதுரை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64. கொரோனா தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.

இவர், வேட்புமனு தாக்கல் செய்த மறுநாளே நுரையீரல் தொற்று காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா அறிகுறிகளுடன் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் ஞாயிறு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பு, குடும்பத்தினர் மத்தியிலும் கட்சியினரிடையேயும் பெரும்வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.