
பயணிகள் நலன் கருதி மதுரை-பழனி,பழனி-கோவை இடையே இரு எண்களில் இயங்கிய ரயில் நாளை முதல் மதுரை-கோவை-மதுரை இடையே ஒரே ரயிலாக பயணநேரத்தை குறைத்து இயங்க உள்ளது.
பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை யை ஏற்ற ரயில்வே நிர்வாகம் பயணிகளின் மேலும் ஒரு கோரிக்கையான கோவை-கொல்லம் இடையே மீட்டர் கேஜ் பாதையில் பொள்ளாச்சி பழனி மதுரை ராஜபாளையம் செங்கோட்டை வழியாக இயங்கிய ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல, கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை – நாகா்கோவில் ரெயிலில் வழக்கமாக கூட்டம் அதிகமாகக் காணப்படும். பயணிகள் வசதிக்காக கோவை – மதுரை இடையே நேரிடையாக விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், கோவை – பழனி, பழனி – மதுரை வழித்தடத்தில் (06462, 06463) ஆகிய எண்களிலும், மதுரை – பழனி, பழனி – கோவை வழித்தடத்தில் (06479, 06480) ஆகிய எண்களிலும் இயக்கப்பட்டு வந்த கோவை – பழனி – மதுரை இணைப்பு ரயில் வருகிற நாளை (1-ந் தேதி) முதல் கோவையில் இருந்து மதுரைக்கு (16721) என்ற எண்ணிலும், மதுரையில் இருந்து கோவைக்கு (16722) என்ற எண்ணிலும் முன்பதிவற்ற விரைவு ரயிலாக இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் இருந்து நாளை (1-ந் தேதி) முதல் பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16721) இரவு 7.35 மணிக்கு மதுரையைச் சென்றடையும். மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16722) பிற்பகல் 12.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு , பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கேரளா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கோவை மதுரை இடையே ரயில் இயக்கும் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் மேலும் ஒரு கோரிக்கையான கோவை-கொல்லம் இடையே மீட்டர் கேஜ் பாதையில் பொள்ளாச்சி பழனி மதுரை ராஜபாளையம் செங்கோட்டை வழியாக இயங்கிய ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வர்த்தகர்கள் தொழில்வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை கொச்சியில் பிரதமர் மோடி கொல்லம் -புனலூர் இடையே புதிய மின் வழித்தடத்தில் சிறப்பு மின்சார ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.





