
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு இன்று ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொது இடங்களில் கொண்டாடப்படவில்லை. அந்த சமயத்தில் வீடுகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் பங்கேற்புடன் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது 18 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட ராட்சத கொழுக்கட்டையை சுமந்து வந்து விநாயகருக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்
விநாயகர் சதுர்த்தியை உற்சாகத்துடன் கொண்டாட பொதுமக்கள் சிறிது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கினர்.
மதுரை மாட்டுத்தாவணி மற்றும் மார்க்கெட்டுகளில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதையும் படியுங்கள்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் சதுர்த்தி பூஜையின் முக்கிய அங்கமான அரு கம்புல், எருக்கம் மாலைகள், வண்ண வண்ண மலர்கள் விற்பனையும் அதிக அளவில் இருந்தது. மார்க்கெட்டு களில் பொது மக்களும் திரண்டு பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, அவல், பொரி, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களையும் ஆர்வத்துடன் வாங்கினர்.
.





