புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மளிகைக்கடை, பல சரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் நெருக்கும் அதிகரிக்க வழி வகுக்கும். மாலை 4 மணி நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் வெள்ளையன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அதன் தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளதாகவும் அதில் கடைகள் செயல்படும் நேரத்தை அதிகரித்து அனைத்து கடைகளையும் திறந்து வைக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழகத்தை காப்பதற்கு தாங்கள் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறது
வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 6 முதல் மே 20 வரையிலான கட்டுப்பாடுகளை மூன்று தினங்களுக்கு முன்பே அறிவித்ததற்கு நன்றி.
அதேநேரம் காய்கறி கடை, மளிகை கடை, பலசரக்குக் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அறிவித்து உள்ளீர்கள். கடைகள் திறந்து இருப்பதற்கு அரசு அனுமதிக்கும் நேரம் மிக மிக குறைவாக இருப்பதால் அந்த குறுகிய நேரத்தில் மக்கள் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது..
அதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது! எனவே மாலை 4 மணி வரை கடைகள் திறந்து இருக்க அனுமதிக்க வேண்டுகிறோம். அதே போல் அனைத்து கடைகளையும் திறந்து வைக்க அனுமதிக்குமாறும் மாலை 4 மணி வரை அந்தக் கடைகளும் செயல்பட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.