மகாத்மா காந்தியின் செயலராக இருந்த வி.கல்யாணம் தமது 99ஆவது வயதில் காலமானார். மே 4, இன்று தமது இரண்டாவது மகளின் வீட்டில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். வயதின் காரணமாக ஏற்பட்ட தள்ளாமையினால் சிரமப் பட்டு வந்துள்ளார்.
அவருடைய இறுதிச் சடங்குகள் மே 5 நாளை மதியம் 1.30 மணி அளவில், பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
மகாத்மா காந்தியின் செயலர்களாக இருந்தவர்களில் இவர் தான் கடைசி நபர். மகாத்மா காந்தியின் தனிச் செயலராக இருந்து, பல்வேறு உதவிகளைச் செய்தவர் வி.கல்யாணம்! காந்தியின் கொள்கைகளை ஏற்று, காந்திய கொள்கைகளுடன் எவ்வித சமரசமும் இன்றி கடைசி வரை வாழ்ந்தவர் இவர்.
தகவலுக்கு : 98407 92732