
மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 75 பேருக்கு, 6 மாதங்களுக்கு, 50,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் கலை, எழுத்து இலக்கிய திறனை அதிகப்படுத்த, சர்வதேச அளவில் இந்தியாவின் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளது.
30 வயதிற்கு உட்பட்ட இந்திய மொழி மற்றும் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்புகளை வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கிய வளம், மொழி வளம், கலைகள் உள்ளிட்டவற்றை வாசிக்கத் தெரிந்த அறிவும், புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை படைக்க, இளைஞர்களை தயார்படுத்தும் வகையில், இது அமைய வேண்டும்.
மேலும் உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாட்டில் இளைஞர்களின் சிந்தனையை மற்றும் அவர்களது உள்ளாற்றல் வெளிப்படுத்தும் வகையாக இந்த திட்டம் அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்த திட்டத்திற்கு, innovateindia.mygov.in/yuva/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பித்து அடுத்த மாதத்திற்குள் உங்களது செயல்திறன் மற்றும் படைப்புகளை பதிவு செய்ய வேண்டும். தேசிய அளவிலான மிகச்சிறந்த 75 படைப்புகளை இந்திய புத்தக அறக்கட்டளையின் மூலம் உள்ள வல்லுநர்கள் குழு அமைத்து தேர்வு செய்வார்கள்.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் சுதந்திர தினத்தின் போது வெளியிடப்படும். இந்தப் படைப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி 12 இளைஞர் தினம் அன்று படைப்புகளாக வெளியிடப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 75 எழுத்தாளர்களுக்கு தேசிய அளவில் இலக்கிய பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் 50 ஆயிரம் உதவித்தொகை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும்.
அந்த எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகள் இந்திய மொழிகளில் மாற்றப்பட்டு புத்தகங்களாக வெளியிடப்படும். 10 சதவீத புத்தக காப்புரிமையும் வழங்கப்படும்.
இந்த இலக்கியப் பயிற்சியானது நம் தமிழ் இலக்கியங்களை உலகிற்கு எடுத்துக்காட்டும் நேரமாக அமையும் என்பதால் மூத்த எழுத்தாளர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அதிக அளவில் பங்கேற்று தமிழ் மொழியை மேம்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
Here is an interesting opportunity for youngsters to harness their writing skills and also contribute to India's intellectual discourse. Know more… https://t.co/SNfJr7FJ0V pic.twitter.com/rKlGDeU39U
— Narendra Modi (@narendramodi) June 8, 2021