அந்த மாதிரி வீடியோ.. கணெக்கெடுத்து வைச்சுட்டாங்க..!

Published:

Pornography
Pornography

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு கடுமையான ஊரங்கு கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் போடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் வீட்டில் முடங்கியிருந்த இளைஞர்கள் வீடியோ கேம் மற்றும் ஆன்லைனில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டனர்.

இதுகுறித்த டேட்டா ஒன்றை வெளியிட்டுள்ள மீடியா ரெகுலேட்டர் அப்காம் (media regulator Ofcom), இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் Porn வெப்சைட்கள் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக கூறியுள்ளது.

செப்டம்பர் 2020ல் மட்டும் இங்கிலாந்தைச் சேர்ந்த 26 மில்லியன் பேர் Porn வெப்சைட்கள் மற்றும் செயலிகளை பார்த்துள்ளனர். அதில், நான்கில் 3 பகுதியினர் பருவ வயது இளைஞர்கள் என தெரிவித்துள்ளது.

இந்த புள்ளவிவரத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் அந்தப் படங்களை பார்த்துள்ளனர். இளைஞர்கள் மட்டுமே அந்தப் படங்கள் இருக்கும் தளங்களையும், செயலிகளையும் உபயோகப்படுத்தவில்லை.

பெண்களும் பார்த்துள்ளனர். media regulator Ofcom சேகரித்துள்ள தரவுகளின்படி 16 விழுக்காடு இங்கிலாந்து பெண்கள் Porn வெப்சைட் மற்றும் செயலிகளுக்கு சென்றுள்ளனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் வீடியோ தளங்களை நெறிமுறைப்படுத்தும் விதமாக ஆன்லைன் அடல்ட் கன்டென்ட் தொடர்பாக ஆய்வை மேற்கொண்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா ஊரங்கு அமலுக்கு வந்தபிறகு இன்டர்நெட் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆன்லைன் கல்வி மற்றும் வீட்டில் இருந்து வேலை, பொழுதுபோக்கு என சகலத்துக்கும் ஆன்லைன் தேவைப்பட்டது.

சராசரியாக ஒருவர் நாள்ளொன்றுக்கு ஆன்லைன் பயன்படுத்தும் விகிதம் 3 மணி நேரம் 37 நிமிடங்களாக 2019ல் இருந்தது.

அந்த விகிதம் ஜெர்மனி மற்றும் பிரான்சில் தற்போது மேலும் 9 நிமிடங்கள் அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் சராசரியாக நாளொன்றுக்கு ஒருவர் 4 மணி நேரம் 7 நிமிடங்கள் ஆன்லைனில் செலவிடுகிறார்.

நெட்பிளிக்ஸ், பிபிசி iபிளேயர் ஆகியவற்றை பயன்படுத்தும்போது, இந்த விகிதம் மேலும் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் அதிகரிப்பதாக media regulator Ofcom தெரிவித்துள்ளது.

சோஷியல் மீடியா வீடியோ தளங்களுக்கு இங்கிலாந்தில் இணையம் பயன்படுத்தும் 97 விழுக்காடு இளைஞர்கள் பார்வையிடுவதாகவும், 3 முதல் 4 வயது இருக்கும் குழந்தைகளில் 93 விழுக்காட்டினரும் வீடியோ தளங்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளது.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

18 முதல் 24 வயதுடைய பதின்பருவத்தினர் அதிகமாக வீடியோ தளங்களை உபயோகிக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் சராசரியாக 1 மணி நேரம் 16 நிமிடங்கள் யூடியூப் தளத்தில் செலவிட்ட அவர்கள், தற்போது 11 நிமிடங்கள் அதிகரித்து 1 மணி நேரம் 27 நிமிடங்களை செலவிடுவது தெரியவந்துள்ளது.

டிக் டாக் செயலியின் வருகைக்கு பின்னர், அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. செப்டம்பர் 2019ல் 3 மில்லியனாக இருந்த யூசர்கள், 2021 மார்ச் மாதம் 14 மில்லியனாக உயர்ந்துள்ளனர். பதின்பருவத்தினரே டிக்டாக் செயலியை அதிகமாக உபயோகிப்படுத்துகின்றனர்.

Related articles

Recent articles

spot_img