தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை! கனமழை எச்சரிக்கை!

அடடே... அப்படியா? கோவை சற்றுமுன் தமிழகம் நெல்லை
heavy rain western ghat
heavy rain western ghat

கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி தென்காசி தேனி கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகும் .செங்கோட்டை தென்காசி புளியரை மேக்கரை குமுளி தேக்கடி பொள்ளாச்சி பகுதிகளில் நல்ல மழை பெய்யும் .

நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளான பாபநாசம் மாஞ்சோலை அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி விகேபுரம் சேர்வலாறு கொடுமுடியாறு ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் .

rainfall focus

மிதமான மழைக்கு வாய்ப்பு : ராதாபுரம் வள்ளியூர் பணகுடி ஆலங்குளம் சேரன்மகாதேவி சங்கரன்கோவில் கயத்தாறு நெல்லை பாளையங்கோட்டை மானூர் திருவேங்கடம் இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு தேனி போடிநாயக்கனூர் பெரியகுளம் கொடைக்கானல் பழனி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் சாரல் மழை பெய்யும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.