“மின் தடை ஏற்பட அணில்கள் காரணம்!” செந்தில் பாலாஜி சால்ஜாப்பு! நெட்டிசன்கள் குபீர் சிரிப்பு!

Published:

squirrel - 2026

மின் தடை ஏற்படுவதற்கான காரணத்தைச் சொல்லி, வித்தியாசமான பதிலை அளித்துள்ளார் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. திமுக அரசு பதவியேற்று பத்து நாட்களில் மின்சார விநியோகத்தைச் சீரமைப்போம் என்றனர். ஆனால் திமுக., அரசு பதவியேற்று  ஒன்றரை மாதங்கள் ஓடி விட்டன.  இந்நிலையில், மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் ஏற்படும் கோளாறுகள், பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளப் படாதது ஆகியவற்றால்,  தற்போது தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

தற்போதைய மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியோ, மின் தடைக்கான காரணமாக, முந்தைய அதிமுக., அரசைக் கைகாட்டி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகிறார். தம் துறையை சரியாகக் கவனிக்காமல், பிறர் மீது பழி போடுகிறார். மேலும், பராமரிப்புக் கருவிகள் புதிதாக மாற்ற வேண்டும் என்று பிட்டு போடுகிறார்… என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மின் தடைக்குக் காரணம் அணில்கள் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் செந்தில் பாலாஜி.  மின் வழித் தடத்தில் செடி கொடிகள் வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போன்ற நேரத்தில் தான் மின் தடை ஏற்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார். 

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

அவரது பேச்சு இப்போது சமூகத் தளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் இதனைக் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். 

மின் கம்பங்களின் வழியாக மேலே செல்லும் மின் கம்பிகள் இருக்கும் ஊர்களில் ஏன் மின் தடை என்பதற்கு செந்தில் பாலாஜி ஒரு காரணத்தைச் சொல்லி விட்டார், ஆனால் பூமிக்குள் தடம் பதித்துச் செல்லும் சென்னை போன்ற பெருநகர்களில் ஏன் மின் வெட்டு என்பதற்கான காரணத்தையும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கின்றனர் நெட்டிசன்கள். 

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1407138538047508482

திறந்த நிலை மின் கம்பி என்றால் ராம கார்யமாக பயிற்சி பெற்ற அணிலும்… பூமிக்குள் செல்லும் மின்வடம் என்றால் பிள்ளையாரின் வாகனமான மூஞ்சுறு எலியும் என… சங்கிகளின் சதிகள் தான் எத்தனை எத்தனையோ?!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Dr S RAMADOSS @drramadoss
மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்! #மின்தடை #TNpowerCuts
சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?
#Doubt

திருவட்டாறு சிந்துகுமார் : ”தென்னை மரம், கொய்யா மரம், சப்போட்டோ மரம், மாமரம்னு நாங்க என் பாட்டுக்கு தாவித்தாவி விளையாடி, பழ மரங்கள்ல படம் பறிச்சு தின்னு கிட்டிருந்தோம். இரும்புல செய்த டிரான்ஸ்பார்மர் பக்கம் நாங்க போகக்கூட மாட்டோம். கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தை எடுத்துகிட்டா , பலத்த காத்தடிச்சா ரப்பர் மரம் முறிஞ்சு விழும் அதனால மின் தடை ஏற்படும். அதை நம்புவாங்க. மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறதுன்னு சொல்றதை எல்லாம் எப்படிங்க மக்கள் நம்புவாங்க…. ?நிர்வாகத்திறமையை மறைக்க கடைசியில எங்கபேர்ல பழியைத்தூக்கிப்போடுறாங்க.. என்னத்த சொல்ல..?” – அணிலார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Senkottai Sriram : சங்கி களான அணில்கள்…
சங்கிகள் நம் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ராமாயணத்தில் ராமனுக்கு உதவிய அணில்களை எடுத்து வளர்த்து பழக்கி…மின்கம்பங்களில் ஏற விட்டு மின் தடையை ஏற்படுத்தி அவப்பெயரை நமக்கு தருகிறார்கள் என்பதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நமக்காகவே உழைக்கும் நம் கடன் பிறப்புகள் நன்றாக உணர வேண்டும் இதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அதை நீ நன்றாக செய்வாய் என்று நான் நம்புகிறேன்
இப்படிக்கு
உறங்கும் ஓய்வறியா சூரியன்

Related articles

Recent articles

spot_img