
கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட, திருவண்ணாமலை கிரிவல பாதையில், ஆந்திராவை சேர்ந்த பெண், அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.
கொரோனா தொற்று ஊரடங்கால், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டு நலம் பெற்று வாழ, ஆந்திர மாநிலம், பீமாவரத்தை சேர்ந்த அருணாசல மாதவி, 48, என்ற பெண், கிரிவலப் பாதையில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அங்கப் பிரதட்சணத்தை தொடங்கினார்.
‘ஓம் அருணாசலாய நமஹ’ என்ற மந்திரத்தை கூறி, தினமும் அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, அங்கப்பிரதட்சணம் செய்கிறார். கிரிவலப் பாதையான, 14 கி.மீ., துாரத்தை முழுவதும் முடிக்க ஐந்து நாட்களாகும்.

கடந்த, 15 ஆண்டுகளாக அண்ணாமலையாரின் பக்தையாக உள்ள இவர், ஏற்கனவே மூன்று முறை, உலக மக்கள் நன்மைக்காக, அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.