குளியல் தொட்டியில் குஷியாய் குளிக்கும் அகிலா!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
akila - 2026

திருச்சி, திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி, திருவானைக்காவல் கோவில் யானை அகிலா குளியலுக்காக, ஏற்கனவே ஷவர் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கோவிலின் உள்ளே நாச்சியார் தோப்பு பகுதியில், கார்த்திகை கோபுரம் அருகே, 3.5 லட்சம் ரூபாய் செலவில், 21 அடி நீளம், 21 அடி அகலத்தில், 6.5 அடி ஆழத்தில் பிரம்மாண்ட குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 12 அடி அகலத்தில் சாய்தள பாதை வசதியுடன் அமைக்கப்பட்ட இந்த தொட்டியில், 2.5 அடி ஆழத்துக்கு தண்ணீர் நிரப்பி, யானை குளியலுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், யானை அகிலா குஷியாக குளித்து மகிழ்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.