அம்மாடியோவ்.. விரல் நகத்தில் மைக்ரோசிப்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் தொழில்நுட்பம்
finger chips - 2026

இன்றைய காலங்களில் வெளியாகும் புதிய ரக ஸ்மார்ட் போன்களில் நியர் பீல்டு கம்யூனிகேஷன் என்று அழைக்கப்படும் என்.எப்.சி தொழில்நுட்பம் இருக்கும்.

இவை பொதுவான தகவலை ஒரு ஸ்மார்ட் போனில் இருந்து மற்றொரு ஸ்மார்ட் போனுக்கு மாற்ற உதவுகிறது.

தற்போதுள்ள தொழில்நுட்பம் மூலமாக என்.எப்.சி வழியாக செல்போனை பக்கத்தில் வைத்தாலே உணரும் தகவல் வாயிலாக பணம் செலுத்திக்கொள்ள முடியும்.

chip - 2026

டிக்கெட் முன்பதிவு, வருகை பதிவேடு, கணினியின் உள்நுழைதல் போன்ற விஷயங்களில் என்.எப்.சி உதவுகிறது.

இந்நிலையில், விரல் நகத்தில் இதனை பதித்து வைத்து உபயோகம் செய்யும் மைக்ரோ சிப் பிரபலமாகி வருகிறது.

துபாயில் இருக்கும் அழகு நிலையத்தில் நெயில் பாலிஸ் மூலமாக நகத்தில் இவை பொருத்தப்பட்டு, விபரங்களை பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

finger chip - 2026

நகத்தில் நைல் பாலிஸ் பூசப்பட்டு இவை மறைக்கப்படுவதால், சாதரணமாக அவை தெரியாது.

தற்போதைய கொரோனா சூழ்நிலையில், இந்த மைக்ரோ சிப் அதிகளவு பயன்படுவதாக இதனை பயன்படுத்துபவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.