December 6, 2025, 4:55 AM
24.9 C
Chennai

பழமையான அரியவகை பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

Rock paintings 1 - 2025

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி குன்று மலைகளின் தொடர்ச்சியாக உள்ள திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே பாப்பாத்திக் கொட்டாய் கிராமத்தில் பெரிய பாறை ஒன்று உள்ளது.

இங்கு மாவட்ட வரலாற்று நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன், பேராசிரியர் எ.சுதாகர் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தபோது, அரிய வகை செங்காவி நிறத்தில் ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பெரிய பாறையின் கீழ் புடவு போன்ற பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது, அழியாமல் இருந்துள்ளது. மொத்தம் அந்த பாறையில் 5 மான்கள் வரையப்பட்டுள்ளன.

இதில் கொம்புகளுடன் விடைத்து நிற்கும் பெரிய மான் ஒன்றும், அதன் எதிர்புறம் கன்றாக இருக்கும் சிறிய மான் ஒன்றும் தெளிவாக பார்வைக்கு புலப்படுகின்றது.

dc1232c2 3481 43b5 80cf 52f3e531e8b5 - 2025

இந்த ஓவியங்கள் செங்காவி நிறத்தைக் கொண்டு வரையப்பட்டள்ளது இவை குறைந்தது 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என பாறை ஓவிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முன்னர் வேட்டவலத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் நீலத்தாங்கல் பகுதியிலும் பல நூற்றாண்டுக்கு முந்தைய பாறை ஓவியங்களை மாவட்ட வரலாற்று நடுவத்தின் குழுவினர் கண்டறிந்து ஆவணப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பகுதியில் உள்ள தொல்லியல் தடயங்களைத் தேடி கண்டுபிடித்து வெளிப்படுத்த தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து வரலாற்று நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் கூறியதாவது

உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, இத்தாலி, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன.

முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பீம்பேட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இதற்கு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

இவற்றுள் பல்வேறு கண்டங்களையும் தாண்டிய சில பொதுவான பண்புகளுடன் விளங்குகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து கூறுகின்றது.

பல்வேறு கண்டங்களிலும் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில், அவற்றின் தோற்றம், குறியீடுகள், அவை வெளிப்படுத்தும் சிந்தனைகள் ஆகியவை பொதுவானதாக அமைகின்றன.

இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் ஓவியங்கள் மூலம் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர் என்பதை அறிய முடிகிறது. ஜான் காலிங்வுட், ரொனால்டு மோரிஸ் ஆகியோர் இவ்வோவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

அதுமட்டும் இன்றி நம் மாவட்டத்தில் பல இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சிறப்புடையதாக வேட்டவலம் பகுதியில் உள்ள பாறை ஓவியங்கள் போன்று தென்மாதிமங்கலம் மலை பகுதியில் வட்ட வடிவில் பாறை ஓவியங்களும் கண்டுள்ளோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories