October 12, 2024, 8:36 AM
27.1 C
Chennai

130 பெண்களை கொடூரமாகக் கொன்ற ‘டேட்டிங் கேம் கில்லர்’ மரணம்!

அமெரிக்காவில் வசித்த மனித உருவிலான ராட்சசன் காலமானான். 130க்கும் மேலான பெண்களைக் கொடூரமாக மானபங்கம் செய்து கொன்ற குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நிலையில் அவர் காலமானான்.

பெண்களைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்வான்.. அதன்பிறகு சுத்தியலால் அடித்து ராட்சசனைப் போல ஆனந்தம் அடைவான்… சாவுக்கும் உயிருக்கும் நடுவில் போராடித் துடிக்கும்போது சற்று நேரம் விட்டு வைப்பான்.. சற்று நினைவு திரும்பியதும் மீண்டும் கொடூரமாக தொந்தரவு செய்வான். அதன்பின் பாதிக்கப்பட்டவரின் காது ஆபரணங்களைப் பறித்து வீட்டில் மறைத்து வைத்துக் கொள்வான். இவ்வாறு பல பெண்களை சித்திரவதை செய்து கொன்ற ராட்சசன் அமெரிக்காவில் ‘தி டேட்டிங் கேம் கில்லர்’ என்று பெயர் வாங்கிய ரோட்னி ஜேம்ஸ் அல்காலா (77) காலமாகியுள்ளான்.

மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள கொர்கோரன் சிறையில் இயற்கையாக மரணம் எய்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  பண்டிகைகளின் அழகைப் பாதுகாத்துக் கொள்வோம்!

7 பெண்களின் கொலை வழக்கில் அவன் மீது குற்றம் நிரூபணம் ஆனது. ஆனால் உண்மையில் அவன் கையால் 130 பேருக்கு மேலாக பெண்கள் கொலைக்கு ஆளானதாக அதிகாரிகள் நம்புகின்றனர் .

1968 ல் எட்டு வயது சிறுமியின் மீதும் 1974இல் 13 வயது சிறுமி மீதும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தான். 1978இல் ‘த டேட்டிங் கேம்’ டிவி ஷோவில் போட்டியில் பங்கு பெற்றான்.

பெண்களின் மீது கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் பழக்கம் உள்ளது அவனுக்கு. அந்த டிவி ஷோவில் தன்னை போட்டோகிராபராக அறிமுகம் செய்து கொண்டான். அதில் வெற்றியும் பெற்றான். இந்த ஷோவால் அவனுக்கு தி டேட்டிங் கேம் கில்லர் என்று பட்டப் பெயர் வந்தது.

1979 இல் ராபின் ஸாம்ஸே என்ற 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக அல்காலாவுக்கு 1980ல் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்டனை ரத்தானது. 2010ல் டிஎன்ஏ பரீட்சை மூலம் அவன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மரண தண்டனை மீண்டும் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு மற்றும் நான்கு பெண்களின் கொலை வழக்கில் மரண தண்டனை நிரூபிக்கப்பட்டது. 2013இல் மற்றும் இரண்டு பெண்களின் கொலை வழக்கு நிரூபனம் ஆனதால் 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ALSO READ:  மாணிக்கவாசகரும் மஹாகணபதியும்!

அல்காலா ஒளித்து வைத்திருந்த பாதிக்கப்பட்ட பெண்களின் காதணிகள் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க உதவியதில் முக்கிய பங்கு வகித்தன. அவனுடைய வீட்டில் இருந்த நூற்றுக்கும் மேலான பெண்களின் போட்டோக்களை போலீசார் ஊடகங்களில் வெளியிட்டனர். அதில் பலரை தற்போது காணவில்லை!

author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ALSO READ:  ஒரே அக்கவுன்டில் 2 பேர் UPI பயன்படுத்தலாம்; விரைவில் அறிமுகமாகிறது!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week