
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் வாய் தவறிய நீச்சல் வீராங்கனை…
அளவுகடந்த ஆனந்தத்தில் இருக்கும்போது ஏதேதோ உளறி விடுவோம். சற்று பொறுத்துத் தான் விஷயம் தெரிந்து நாக்கை கடித்துக் கொள்வோம். இது மனிதனின் இயல்புதான். இப்படிப்பட்ட சம்பவமே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் செவ்வாய்க்கிழமை அன்று நடந்தது.
100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஸ்விம்மிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை கேலி மெக்கன் தங்கம் வென்ற ஆனந்தத்தில் வாய் தவறி ஏதோ கூறிவிட்டார்.
பதக்கம் வென்ற பின் ஒரு மீடியா உறுப்பினர், கோல்ட் மெடல் வென்றது எவ்வாறு உள்ளது… எவ்வாறு உணருகிறீர்கள்… என்று வினவியபோது… மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த கேலி தவறிப்போய் சொல்லக் கூடாத ஒரு ஆபாச வார்த்தையை (F…k) சொல்லிவிட்டார். ஆனால் தான் தவறாக பேசி விட்டோம் என்பதை உணர்ந்து உடனே சமாளித்து.. மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறினார்.
தற்போது இந்த வீடியோ சோஷல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
தங்க மெடல் வென்றதற்காக கேலிக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள், அளவு கடந்த ஆனந்தத்தில் இருக்கும்போது இது போன்ற பதங்களை உதிர்ப்பது இயல்புதான் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். உணர்ச்சிவசப்படுவது யாருக்கும் இயல்பே என்பதற்கு இந்த வீடியோ நேரடி உதாரணம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
ஆனால் கேலி இவ்வாறு ஆபாச வார்த்தை பேசியது பற்றி அவருடைய தாயாரிடம் கேட்டபோது.. நான் அவளிடம் பேசுகிறேன் என்று அவர் தாய் கூறியது குறிப்பிடத்தக்கது.
கேலி 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியை 57.47 செகண்டில் பூர்த்தி செய்து கோல்டு மேடலை தனதாக்கிக் கொண்டார். இது இப்படி இருக்கையில்… 20 வயதாகும் கேலிக்கு ஒலிம்பிக்கில் மெடல் வெல்வது இதுவே முதல் தடவை அல்ல. இதுவரைக்குமே அவர் நான்கு முறை பதக்கம் வென்று ரெக்கார்டு ஏற்படுத்தியுள்ளார்.