- பாத்ரூம் கூட தங்கத்தால் ஆனது… என்ன ஒரு சம்பாத்தியம்… சம்பளமா.. கிம்பளமா…
- ரஷ்யாவில் டிராபிக் துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- இந்த ஊழலில் 35 அதிகாரிகளுக்கு மேலாக லஞ்சம் பெற்ற செய்தி வெளிச்சத்துக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக கர்னல் அலெக்ஸி ஸஃபோனோவ் என்ற உயர் அதிகாரியின் வீட்டை சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அங்கு படுக்கையறை ஹால் சமையலறையில் பல பொருட்களோடு கூட பாத்ரூம் கூட தங்கத்தால் கட்டப்பட்டிருந்தது. அதற்கு மேட்சிங்காக ஃப்ளோரிங் கூட பிரத்தியேகமான மார்பிள் கொண்டு அமைத்திருந்தார்கள்.
அந்த வீட்டுக்கு முன்னால் இரண்டு விலை உயர்ந்த கார்கள் உள்ளன. சோதனை குழு இந்த வீட்டில் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது எடுத்த 50 செகன்ட் அளவு நீளமுள்ள வீடியோ தற்போது யூடியூபில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை நாலு லட்சம் பேருக்கு மேலாக பார்த்துள்ளார்கள்.
அலெக்ஸி ஸபோனோவ் என்ற அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் மேலும் 6 அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டு வாகனங்களுக்கு ஃபேக் பர்மிட்களை அளித்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்தந்த வாகனங்கள் எப்படிப்பட்ட கட்டணமும் செலுத்தத் தேவையின்றி அவர்கள் சரக்கு ரவாணா செய்யலாம். இதன்மூலம் அவர்கள் மிகப்பெரும் அளவில் ஊழலுக்கு துணிந்து உள்ளார்கள் என்று வழக்கு பதிவாகியுள்ளது.
இந்த வழக்கில் மேலும் 35 பேருக்கு மேலாக சந்தேகத்திற்கிடமான அதிகாரிகள் உள்ளார்கள். இந்த வழக்கில் அலெக்சிக்கு சுமார் 15 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.