
இரவு ஆட்டோவில் ஏறிய இளம்பெண்… டிரைவரின் நடத்தையில் மாற்றத்தை அறிந்து… திஷா ஆப் பட்டனை அழுத்தினார்… பிறகு என்ன நடந்தது தெரியுமா?
ஆந்திரப் பிரதேச அரசு உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கிய திஷா ஆப் நெல்லூர் மாவட்டத்தில் இளம்பெண்ணை ஆட்டோ டிரைவரின் தொல்லையிலிருந்து காப்பாற்றியது.
ஆட்டோ டிரைவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக மொபைலில் உள்ள திஷா ஆப் எஸ்ஓஎஸ் பட்டனை ஆன் செய்ததால் இரண்டே நிமிடங்களில் போலீசார் இளம்பெண்ணின் உதவிக்கு வந்து அவரை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர்.
இளம்பெண்ணை பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்த போலீசாரை குண்டூரு டிஐஜி திருவிக்ரம் வர்மா பாராட்டினார். அவர் மட்டுமின்றி, நெல்லூர் மாவட்ட மக்கள் கூட போலிஸாரின் சேவைகளை பாராட்டினர்.
நெல்லூர் மாவட்டம் தொரவாரி சத்திரம் போலீசார் திஷா ஆப் மூலம் உதவி கோரிய இளம்பெண்ணை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர். சூலூர்பேட்டை அருகில் உள்ள ஸ்ரீசிட்டியில் பணிபுரிந்து வந்த ஒரு இளம்பெண் சொந்த ஊரான மர்காபுரம் சென்று திரும்பி வரும்போது நாயுடுபேட்டையில் இருந்து சூலூர்பேட்டை செல்வதற்கு இரவு பத்தரை மணிக்கு ஹைவேயில் செல்லும் ஒரு ஆட்டோவில் ஏறினார்.
ஆனால் ஆட்டோ கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் டிரைவரின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. சந்தேகம் வந்ததால் திஷா ஆப்பின் எஸ்ஓஎஸ் பட்டனை ஆன் செய்தார் அந்த இளம்பெண். உடனடியாக போலீசுக்கு செய்தி சென்றது.
இரவு 10.38 மணிக்கு செய்தி கிடைத்தவுடன் 10.40க்கு பாதிக்கப்பட்ட பெண்ணோடு போனில் பேசி தைரியம் கூறினர். தொரவாரிசத்திரம் போலீசார் மற்றும் ஹைவே மொபைல் ஊழியர் 10.42 மணிக்கு இளம்பெண் பயணித்த ஆட்டோவின் அருகில் வந்து அவரைத் தம் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பாக சூலூர்பேட்டை அழைத்துச் சென்று உறவினர்களின் வீட்டில் சேர்த்தனர்.
வெறும் நான்கு நிமிடங்களிலேயே போலிசார் ஹைவேயில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவின் அருகில் வந்து சேர்ந்து இளம்பெண்ணை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர்.
திஷா ஆப் உபயோகத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு இளம்பெண்ணும் திஷா ஆப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்றும் குண்டுரு டிஐஜி திரிவிக்ரம் வர்மா குறிப்பிட்டார்.
பெண்கள் யாரும் தைரியத்தை இழக்க வேண்டாம் என்றும் பெண்களுக்கு போலீசார் எப்போதும் துணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மாநில அரசாங்கமும் திஷா ஆப் பயன்பாடு குறித்து விவரமாக புரிதல் ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு இளம் பெண்ணும் ஒவ்வொரு பெண்மணியும் திஷா ஆப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.