December 5, 2025, 4:03 PM
27.9 C
Chennai

நாவில் நீர் ஊறும் நாவல் பழங்கள்… உரிய விலை கிடைக்காமல், ‘விடியல்’ கிடைக்குமா என விவசாயிகள் வேதனை!

naval pazhangal
naval pazhangal

அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் அதிகளவில் நாவல் பழங்கள் விளைச்சல் இருந்தாலும், வெளிமாநிலங்களில் இருந்து பழங்கள் வருவதால், உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், சேமித்து வைத்திருக்க, குளிர்பதன கிடங்கு அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி, ஆதனூர், வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, மேட்டுப்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500 ஏக்கர் அளவில் விவசாயிகள் நாவல் பழ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் நாவல்  பழங்களை, மதுரை மற்றும் முடுவார்பட்டி   பழசந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். 

naval pazhangal1
naval pazhangal1

35 கிலோ எடையுள்ள நாவல் பழம் ரூ.1500 முதல் ரூ.25000 வரை விலை கிடைத்து. வந்தது. ஆனால் தற்போது, அதிகளவில்  நாவல் பழங்கள் வெளிமாநிலத்தில் இருந்து வருவதால், சந்தையில் விலை சரிந்து, 35 கிலோ எடையுள்ள நாவல் பழங்கள் ரூ. 400 முதல் ரூ. 500 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்றும், கூலிஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. என்றும், வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

naval pazhangal2
naval pazhangal2

மேலும், இப்பகுதியில், அதிகளவில் விளையும் நாவல் பழங்களை பதப்படுத்த குளிர்பதன கிடங்கும், பழக்கூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய ஆதார விலை கிடைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

நாவல் பழங்கள் 2 அல்லது 3 மாதங்கள்  சீசனில் விளையும் பழங்கள். இதனால் தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து வரும் நாவல் பழங்களை தடுத்து, உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

koyya palangal1
koyya palangal1

இது போல், கொய்யா விளைச்சலும் அதிக அளவில் இருந்தாலும், குளிர்பதனக் கிடங்கு இல்லாததால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

அலங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விலையும் கொய்யா பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், பழக்கூழ் தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில், விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் மா, கொய்யா உள்ளிட்ட பழங்களை மதுரை மற்றும் முடுவார்பட்டி   பழ சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். 35 கிலோ எடையுள்ள, கொய்யா ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை கிடைத்து வந்தது. 

koyya palangalw
koyya palangalw

ஆனால், தற்போது அதிகளவில் கொய்யா பழம் விளைந்து வருவதால், சந்தையில், விலை சரிந்து 35 கிலோ எடையுள்ள கொய்யா ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்றும், கூலிஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், வேதனையடைந்த விவசாயிகள் குவியல் குவியலாக பழங்களை கீழே கொட்டி வருகின்றனர். 

தொடர்ந்து,  கால்நடைகளுக்கும் இரையாக்குகின்றனர். மேலும், இப்பகுதியில் அதிகளவில் விளையும் மா, கொய்யா பழங்களை பதபடுத்த குளிர்பதன கிடங்கும், பழகூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய ஆதார விலை கிடைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories