பக்தர்களுக்கு ஸ்ரீவாரி தன பிரசாதம்! திருப்பதி தேவஸ்தானம்!

அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா சற்றுமுன்
thirupathi 2
thirupathi 2

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் நேர்த்தி கடனாக பக்தர்கள் ‘முடிப்பு’ செலுத்துவது ஐதீகம். அவற்றில் அதிகமாக சில்லறை நாணயங்கள் இருக்கும். தினமும் ரூ.20 லட்சம் வரை சில்லறை நாணையங்கள் வருகின்றன.

அவற்றை ரூ.1, 2, 5 என தனித்தனியாக பிரித்து மூட்டை கட்டி, பத்திரமாக வைக்கின்றனர். இதனுடன் வெளிநாட்டு நாணயங்கள், கரன்சிகளும் பாதுகாக்கப்படும்.

இந்த ‘ஸ்ட்ராங் ரூம்’-இல் ஏழுமலையானுக்கு மன்னர்கள் காலம் முதல் தற்போது பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விலையுயர்ந்த நகைகளும் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், சில்லறை நாணயங்களை கணக்கு போட்டு வாங்குவதற்கு நேரம் அதிகமாகும் என்பதால் எந்த வங்கியும் இதனை கணக்கில் வைக்க முன்வரவில்லை.

இதனால், 1 ரூபாய் நாணயங்களை நூறு, நூறாக பாக்கெட்டில் அடைத்து, அதனை ஸ்ரீவாரி தன பிரசாதம் எனும் பெயரில் திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் விற்பனை செய்ய தொடங்கியது.

இவற்றை தங்கும் அறைகளுக்கு டெபாசிட் செய்த பக்தர்களுக்கு, அவர்கள் அறைகளை காலி செய்த பின்னர் டெபாசிட் பணத்தை திரும்ப கொடுக்கும் போது இந்த சில்லறை நாணயங்களை வழங்கி வருகிறது.

இதனை வேண்டாமெனும் பக்தர்களுக்கு ரூபாய் நோட்டுகளையே தேவஸ்தானம் வழங்கி விடுவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.