தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு புதிய பேருந்து நிலையம் முன்பு இந்துக்களையும் ஹிந்து பெண்களையும் சனாதன தர்மத்தையும் அவதூறாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் திருமாவளனை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட பார்வையாளர் மாசானம், தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் நாராயணன், நகரச் செயலாளர் பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் Bjp சங்கர சுப்பிரமணியன், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சபரிமணி அச்சம்புதூர் தங்கம் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகரில் இன்று மாலை 5.30மணி அளவில் T.N புதுக்குடி காமராஜர் சிலை எதிரே, இந்துப் பெண்களை இழிவு படுத்திப் பேசிய திருமாவளவனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நகர தலைவர் அருண்பாண்டியன்
நகர செயலாளர் இசக்கி முத்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைெற்றது.