‘டிக்டாக்’ நண்பன் அஜ்னாஸை சந்திக்கச் சென்ற பெண்! போதை மருந்து கொடுத்து… கும்பல் வன்புணர்வு!

Published:

rape
rape

கேரளா: தனது ‘ஆன்லைன் நண்பரை’ சந்திக்கச் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கிய குற்றவாளி அஜ்னாஸ் உட்பட நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

26 வயதான அஜ்னாஸ் மற்றும் 36 வயதான ஃபஹத் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். கோழிக்கோடு அருகில் உள்ள அதோலி கிராமப் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த நிஜாஸ், சுஹைப் ஆகியோர் சனிக்கிழமை காவலில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

டிக்டேக் வீடியோ சமூகத் தளம் மூலம் நட்பாக இணைந்த ஆன்லைன் நண்பர் அஜ்னாஸ் என்பவரை சந்திப்பதற்கு, தனது ஊரான கொல்லத்தில் இருந்து 300 கி.மீ., தொலைவுக்கு பயணம் செய்து, கேரளாவின் கோழிக்கோட்டுக்குச் சென்றார் 32 வயது பெண் ஒருவர். அவரை, அஜ்னஸும் அவரது மற்ற மூன்று நண்பர்களான ஃபஹத், நிஜாஸ், சுஹைப் ஆகியோரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

சில நாட்களுக்கு முன்பு போதை மருந்து மற்றும் மது கொடுத்து அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளார். இந்த விவகாரத்தில், 26 வயதான அஜ்னாஸ் மற்றும் 36 வயதான ஃபஹத் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். அதோலியைப் பூர்வீகமாகக் கொண்ட நிஜாஸ் மற்றும் சுஹைப் சனிக்கிழமை பொலிஸ் காவலில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண் ஆன்லைன் வீடியோ பகிர்வு தளமான டிக்டாக் மூலம் அஜ்னசுடன் நட்பு முறையில் தொடர்பு கொண்டுள்ளார். அன்பின் சாக்குப்போக்கில், அஜ்னாஸ் அவரை சந்திக்க கோழிக்கோடுக்கு வரவழைத்தார். வியாழக்கிழமை அவர் அங்குச் சென்றதும், அஜ்னாஸ் மற்றும் ஃபஹத் அவரை நகரின் புறநகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். முதலில் அஜ்னாஸ் அவளை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் ஃபஹத்தை அறைக்கு அழைத்தார். அவர்கள் அவளை மது அருந்தவும், மற்ற போதை மருந்துகளை வலுக்கட்டாயமாக உட்கொள்ளவும் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் அதை தங்கள் செல்பேசிகளிலும் படம்பிடித்தனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்பு, அஜ்னாஸ் அவரை தன் பிளாட்டிற்கு அழைத்து வந்ததாகவும், இரவு 11 மணியளவில், ஹோட்டலில் மற்றொரு அறையை முன்பதிவு செய்த அவனது மற்ற இரண்டு நண்பர்களும் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நான்கு பேரும் அவளை குடித்துவிட்டு மொட்டை மாடியிலும் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, அவர் இறந்துவிடுவாரோ என்ற பயத்தில், அவர்கள் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

காவல்துறையினரின் தகவல்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பழைய குற்றவாளியாம். ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் 376 டி பிரிவின் கீழ் சேவாயூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related articles

Recent articles

spot_img