போர்வைக்குள் வந்து காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்பித்த இளைஞர்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
snake 1 2
snake 1 2

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது அது போன்ற ஒரு நிகழ்வு தான் அரங்கேறியுள்ளது.

பொதுவாக உறக்கத்தில் இருக்கும் போது பாம்பு கடித்தால் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்தவர்களை கடித்த சம்பவமும் அரங்கேறி உள்ளது.

ஆனால் ராஜஸ்தானில் பன்ஸ்வாராவில் என்ற இடத்தில் ஒரு இளைஞனின் அனுபவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மண்டரேஷ்வர் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜெய் உபாத்யாயா என்ற இளைஞனின் போர்வைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் உபாத்தியாயா என்பவன் தனது கோயில் படிப்பின் ஒரு பகுதியாக நாற்பத்தி நான்கு நாட்கள் கோவிலில் தங்கியுள்ளார். நாள்தோறும் அவர் தரையில் ஒரு போர்வையை விரித்து உறங்கி வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்றும் இளைஞன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரின் பக்கமாக ஊர்ந்து வந்த பாம்பு இளைஞனின் போர்வைக்குள் நுழைந்தது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. சிறிது நேரத்தில் ஜெய் உபாத்யாயாவின் காலைச் சுற்றியதால் அவர் பதறிப்போனார்.

பின்னர் பாம்பை பார்த்ததும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார். ஆனால் பாம்பு இளைஞரை சீறிப்பாய்ந்து கடிக்க முற்பட்டது. அவர் பாம்பிடம் இருந்து உயிர்தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.