December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

செப்.11ன் மாறாத வடுக்கள்: மாற்றம்… ஏமாற்றம்… பின்னேற்றம்!

twin towers
twin towers

பின் லாடன் தலைமையிலான அல் கொய்தா (அல் கயீதா) பயங்கரவாதிகளால் இரட்டை கோபுரம் தாக்கி வீழ்த்தப்பட்டு நேற்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன.

அல் கொய்தாவுக்கு இடமளித்த ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் அரசு மீது போர் தொடுத்தார் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். தாலிபான்கள் ஓட்டம் பிடித்தனர் – பின் லாடன் தலை மறைவு. ‘ஜனநாயக’ அரசு அமைக்கப்பட்டது.

அதோடு ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறாமல், தொடர்ந்து 20 ஆண்டுகளாக தன் துருப்புகளை அங்கே வைத்தது அமெரிக்கா. கடந்த 20 ஆண்டுகளில் பல அமெரிக்கர்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர் (3000 +) . பல ஆஃப்கன் பொதுமக்கள் உயிரிழந்தனர் (2 லட்சம் என்கிறார்கள்).

20 ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் அமெரிக்க வரிப்பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள் ஆஃப்கானிஸ்தானில். இந்த 20 டிரில்லியனுக்கு எந்த உள்கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை. அத்தனையும் இராணுவ தளவாடங்களுக்காகவும், இராணுவ காண்டிராக்ட் நிறுவனங்களுக்காகவும், ஆஃப்கன் படை வீரர்களுக்கும் செலவிடப்பட்டது என்பது கொடுமையிலும் கொடுமை.

ஆஃப்கானிஸ்தானில் இந்தியா மட்டுமே – அதுவும் மோதி ஜி பொறுப்பேற்ற பின் – உள்கட்டமைப்புக்காக கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடிகள் செலவிட்டது. பள்ளிகள், பெரிய அணை, நீர் மின்சாரம், சாலைகள், மின் இணைப்பு கட்டமைப்புகள், பாராளுமன்றம் என பலவற்றையும் மோதி அரசு ஆஃப்கானிஸ்தானில் ஏற்படுத்திக் கொடுத்தது. மோதியின் செயல்களால் சாமானிய ஆஃப்கானிஸ்தான் மக்கள் மனத்தில் இந்தியாவுக்கு நன்மதிப்பு என்கிறார்கள்.

sep 11 us attack
sep 11 us attack

2 டிரில்லியன் டாலருக்கு (ரூ 147,05,220 கோடி?) என்னென்ன கட்டிக் கொடுத்திருக்கலாம்? ஆனால் நோக்கம் ஆஃப்கானிஸ்தானை ஜனநாயக நாடாக மாற்றுவதோ அல்லது அவர்களுக்கு நல்லது செய்வதோ அல்ல.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா செலவிட்ட அமெரிக்க மக்களின் வரிப்பணம் 2 டிரில்லியன் டாலரும், அமெரிக்க ஐரோப்பிய இராணுவ தளவாட கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் போய் சேர்ந்தது என்பதே உண்மை.

20 ஆண்டுகளாக அமெரிக்காவின் சிறந்த ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்ற ஆஃப்கன் இராணுவம், சண்டையே போடாமல் தாலிபான்களை ஆட்சியை பிடிக்க வைத்தது! இது தானா உங்க டக்கு அமெரிக்க – ஐரோப்பிய &%%*?
ஜார்ஜ் புஷ் போன பின் அடுத்து வந்த ஜனாதிபதிகள் ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் எந்த மாற்றங்களும் செய்யாமல் தொடர்ந்து பில்லியன்களை வாரி இறைத்தனர் – சராசரியாக ஆண்டுக்கு 100 பில்லியன்கள்.

ஒபாமா காலத்தில் பெண்டகன் துருப்புகளை திரும்பப் பெற முடிவெடுத்தது. (அமெரிக்க ஜனாதிபதி ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது. அப்படி முடிந்திருந்தால் டிரம்ப்பை ஜனாதிபதியாக இருக்கும் போதே ட்விட்டர், முகநூல் தூக்குமா? முடிவெடுப்பதெல்லாம் அரசு அதிகாரிகள் @ பெண்டகன்).

அமெரிக்க வரலாற்றில் எந்த நாட்டிலும் போர் தொடுக்காத ஒரே ஜனாதிபதி டிரம்ப். இதனால் இராணுவ தளவாட கார்ப்பரேட்டுகளுக்கும் அதை சார்ந்தவர்களுக்கும் டிரம்ப் மேல் கடுப்ஸ். என்றாலும் டிரம்ப் சிரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்த அமெரிக்க துருப்புகளை திரும்பப் பெற்றார். எந்த பிரச்சினையும் வரவில்லை என்பதை கவனிக்கவும்.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து துருப்புகளை இந்த மே மாதம் திரும்ப பெறப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். ஆட்சி மாறி – தேர்தல் முறைகேடுகள் செய்து – ஜோ பைடன் / கோமாளி ஹாரிஸ் ஆட்சி வந்தது.

துருப்புகளை ஆகஸ்ட் 31க்குள் திரும்ப பெறப்போவதாக சொன்ன பைடன், ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் இவ்வளவு விரைவாக பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 3 மாதங்களாவது ஆகும் தாலிபான் பிடிக்க என்று கணித்திருந்தார்.

தாலிபான்கள் மூன்றே நாட்களில் பிடித்ததும், அமெரிக்கர்களை ஆஃப்கனிலிருந்து வெளியேற்றும் முயற்சி சொதப்பியது. உலக அரங்கில் அசிங்கப்பட்டது அமெரிக்கா. இன்னும் பல அமெரிக்கர்கள் ஆஃப்கானிஸ்தானில் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1, அமெரிக்காவை அசிங்கப்படுத்தும் விதமாக, 20ஆம் ஆண்டு நினைவு தினமான 2021 செப்டம்பர் 11 அன்று ஆட்சி அமைக்கப்போவதாக சொன்னது தாலிபான் அரசு. பல நாடுகளும் அதை கண்டித்ததும் தன் முடிவை மாற்றிக் கொண்டது தாலிபான்.

2, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட அத்தனை பயங்கரவாத இயக்கங்களையும் உருவாக்கி வரும் ஃபேக்டரியாக செயல்படும் பாகிஸ்தான் தான் அல் கொய்தா, தாலிபான்கள் பின்னாலும் இருக்கின்றன. இந்த பயங்கரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பில்லியன்களை அமெரிக்கா உள்ளிட்டவற்றிடம் இருந்து பெற்று வந்தது பாகிஸ்தான்.

தாலிபான்கள் அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்துவதால் தன் பில்லியன்கள் காணாமல் போகும் பயத்தில் தாலிபான்களை பின்னாலிருந்து இயக்கி காபூலை கைப்பற்ற வைத்தது பாகிஸ்தான். பஞ்ச்ஷீர் குழுவை வான்வெளித் தாக்குதல் நடத்தி கொன்றதும் பாகிஸ்தான் தான். தன் திட்டங்களை சிதைத்ததால் அமெரிக்காவின் கடுப்பிற்கு ஆளாகியிருக்கிறது பாகிஸ்தான் இப்போது.

அமெரிக்காவின் கடந்த இருபது ஆண்டு ‘பயங்கரவாத ஒழிப்பு’ போர்களில் அமெரிக்கர்கள் ஏழைகளாகியிருக்கிறார்கள், அமெரிக்க / ஐரோப்பிய அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள், இராணுவ தளவாட நிறுவனங்கள் பணக்காரர்களாகி இருக்கிறார்கள்.

தாலிபான்களை ஒடுக்கி வைத்ததால் அமைதி நிலவியதன் காரணமாக சீனா, ரஷ்யா, ஈரான் வலுவாகியுள்ளன. தாலிபான்களை இப்போது கட்டவிழ்த்து விட்டிருப்பதால் அவற்றின் ஸ்திரத்தன்மை குறையும் – பயங்கரவாதத்தால்.

தாலிபான் அரசை சீனா, பாகிஸ்தான் தவிர வேறெந்த நாடும் அங்கீகரிக்கப்போவதில்லை என்று தெரிகிறது. ஆரம்பகாலத்தில் ஆதரவு தெரிவித்த ரஷ்யா பின்வாங்கி விட்டது. “மோதி அரசு தாலிபானை அரவணைக்க வேண்டும்” என்று கூவிய கூலிபான்களையும் காணோம்.

2001 செப்டம்பர் 11 அன்று நான் சவுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே என் அலுவலகத்தில் இருந்த அமைதி மார்க்கத்தவர் – சவுதி, சிரியா, எகிப்து, பாலஸ்தீன, இந்திய கோஷ்டி – மேஜை மேலேறி ஆடிய ஆட்டமும், கொண்டாட்டமும் பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.

  • செல்வநாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories