வாய்ஸ் மெஸேஜில் புதிய அப்டேட்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
whatsapp
whatsapp

வாட்ஸ் அப்பில் குரல் பதிவு மூலம் மெசேஜ் அனுப்பும் நபர்களுக்கு நிறுவனம் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் எப்போதும் அதன் பயனர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயன்பாட்டில் புத்துணர்ச்சியை தக்கவைத்து மேலும் பயனர்களை ஈர்க்கச் செய்கிறது.

இப்போது, மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் ஒரு புதிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சத்தை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

ஒரு நபர் வாட்ஸ் அப்பில் குரல் பதிவு அனுப்புவதற்கு முன்பு அதிலுள்ள தகவல்களை சரிபார்க்க அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

குரல் குறிப்பு அம்சம் தற்பொழுது பயனர் தங்கள் செய்தியைப் பதிவுசெய்தவுடன், அந்த குறிப்பிட்ட பதிவு நேரடியாக அனுப்பப்படும். இருப்பினும், புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தினால், பயனர்கள் அனுப்பும் முன் தங்கள் என்ன செய்திகளை அதில் பதிவு செய்துளோம் என்பதை கேட்கலாம் மற்றும் தேவைப்பட்டால் அவர்களிடம் மாற்றங்களைச் செய்யலாம்.

இது தவிர, மெசேஜ் அனுப்புபவர்கள் அவரது குரல் குறிப்பை பதிவு செய்யும் போது வாட்ஸ்அப் ஒரு அலைவடிவத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலியின் பீட்டா பதிப்பிற்கான புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் Wabetainfo படி, வாட்ஸ்அப் முதலில் Android மற்றும் iOS பீட்டா சோதனையாளர்களுக்காக இந்த 2 அம்சங்களை அறிமுகப்படுத்தும்.

மெசேஜ் அனுப்பும் நபர்கள் தங்கள் பதிவை இடைநிறுத்தி அவர்கள் விரும்பியபடி தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. “வாட்ஸ்அப் இரண்டு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலாவது நிகழ்நேர குரல் அலைவடிவங்கள் மற்றும் குரல் செய்தியை பதிவு செய்வதை நிறுத்துவதற்கான சாத்தியம் ஆகியவற்றைக் காட்டுகிறது. இரண்டாவது அம்சம், அதை அனுப்பும் முன் பதிவு செய்யப்பட்ட குரல் செய்தியை கேட்கும் திறன் பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.