washing Machine
washing Machine

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஸ்ரீநிவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு துணி துவைக்க வாஷிங்மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் வீட்டில் சேமித்த அழுக்கு துணிகளை துவைப்பதற்காக வாஷின் மெஷினை திறந்துள்ளார். அப்போது தீடீரென வாஷிங்மெஷின் கதவிலிருந்து நல்லப்பாம்பு திடீரென படமெடுத்து ஆடியது.

படமெடுத்து சீறிய நல்லப்பாம்பை கண்ட ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளார். ஸ்ரீநிவாஸின் சத்தத்தை கேட்டு வந்த அவரின் குடும்பத்தினர் பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்து குடும்பமே கூச்சலிட்டுள்ளனர். இவர்களின் சத்தத்தை கேட்ட பாம்பு வாஷிங்மெஷின் டிரம்மிற்குள் போய் பதுங்கியுள்ளது.

அதன்பின், ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர் வந்து வாஷிங்மெஷினில் பாம்பு இருக்கும் தகவலை பாம்பு பிடிக்கும் நபருக்கு தெரிவித்துள்ளனர். பாம்பு பிடிக்கும் நபர் சம்பவ இடத்திற்கு வந்து வாஷிங் மெஷினுக்குள் சென்ற பாம்பை பிடித்து பையில் போட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending