marriage 3
marriage 3

மணமகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மணமகனை பலரும் வாழ்த்தி வரும் நிலையில், கிட்டதட்ட 3.5 கோடி பேர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்து ரசித்துள்ளனர்.

புதுமணத் தம்பதியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

marriage
marriage

இந்த வீடியோவில், மணமகன் மணமகளின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் பெறுவதைக் காண முடிகிறது. பொதுவாக திருமணமான புதுமண தம்பதிகளில், மணப்பெண் தான் மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார்.

ஆனால், மணமகன் தனது புது மனைவியான மணமகளின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் கேட்பது புதுசாக இருந்ததால், பலரும் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்களில் பெரும்பாலோனோர், மணமகனை வெகுவாக பாராட்டுகின்றனர்.

marriage 1
marriage 1

அந்த வீடியோவில், கோவில் வளாகத்தில் மணமகனும் மணமகளும் நின்று கொண்டுள்ளனர். முதலில் இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டுக் கொள்கின்றனர். அதன்பின்னர் மணமகள், மணமகனின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெறுகிறார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

தொடர்ந்து, மணமகன் திடீரென மணமகளின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெறுகிறார். எனினும், மணமகள் புன்னகைத்துக் கொண்டே பின்னால் செல்கிறார்.

இந்த வீடியோவை, கிட்டத்தட்ட 3.5 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த புதுமணத் தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய பலரம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending