
ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 31ஆவது ஆட்டம்
கொல்கொத்தா vs பெங்களூர்…
முனைவர் கு.வை. பாலசுப்ரமணியன்
நேற்றைய ஆட்டம் ஒரு ஒருதலைப் பட்சமான ஆட்டம். கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் ஒரு விக்கட் இழப்பிற்கு 94 ரன்கள் (ஷுப்மான் கில் 48, புதிய ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41) எடுத்து ராயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூர் அணியை (92 ரன்கள், தேவதத் படிக்கல் 22, ரசல் 9 ரன்னுக்கு 3 விக்கட், வருண் 13 ரன்னுக்கு 3 விக்கட்) தோற்கடித்தது.
முதல் கட்டத்தில் இரண்டு அணிகளும் ஏழு ஆட்டங்கள் ஆடியுள்ளன. பெங்களூர் அணி ஐந்தில் வெற்றி; கொல்கொத்தா அணி ஐந்தில் தோல்வி. ஆனால் நேற்று அதிர்ஷ்டம் தலைகீழாக மாறியது.
பெங்களூர் அணி திக்கித் திணறி ஆடி, 19 ஓவர்களில் எல்லா விக்கட்டுகளையும் இழந்து 92 ரன் எடுத்தது. மாபெரும் ஆட்டக்காரர்களான கோலி (5), மேக்ஸ்வெல் (10), டி வில்லியர்ஸ் (0) ஆகியோர் சோபிக்கவில்லை.
வருண் சக்கரவர்த்தி சுனில் நாரயண் இருவரின் மாயச்சுழலில் சிக்கி பெங்களூர் ரன் அடிக்கமுடியாமல் திணரியது.
கொல்கொத்தா ஆடத் தொடங்கியபோது, இந்தப் பிரச்சனையெதுவும் இல்லை. ஷுப்மன் கில் அரை சதம் அடிக்கவில்லை; அது மட்டுதான் பிரச்சனை. கொல்கொத்தா, பத்து ஓவர் விளையாடி, 94 ரன்கள் எடுத்து மிகச் சுலமாக வென்றது.
இந்த வெற்றியால் கொல்கொத்தா புள்ளிப் பட்டியலில் முன்னேறியிருக்கிறது. பெங்களூர் மாற்றமின்றி அதே இடத்தில் நீடிக்கிறது.
இன்றைய ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே நடக்கிறது.