சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி தெரிவித்த WHO இயக்குநர்!

who Tedros Adhanom Ghebreyesus - 2026

கோவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட டெட்ரோஸ் அதானோம் “அக்டோபரில் கோவிட் -19 தடுப்பூசி ஏற்றுமதிகளை இந்தியா மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி.

கோவிட் -19 தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கான இந்தியாவின் முடிவால் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நாடுகளிலும் 40 சதவிகித தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு ஒரு முக்கியமான வளர்ச்சியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நாட்டில் தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததால் மார்ச் மாதத்தில் மத்திய அரசு கோவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது. எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், அடுத்த மாதம் முதல் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..

கடந்த திங்களன்று, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவிட் -19க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டின் படி உபரி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பூட்டான், மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை, பிரேசில், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, டிஆர் காங்கோ, நைஜீரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா ஏற்கனவே தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories