
இந்த மாத துவக்கத்தில் X70 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களை விவோ சீனாவில் அறிமுகப்படுத்திய நிலையில், மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் அறிமுகம் எப்போது என்ற அதிகாரப்பூர்வ தகவலை Vivo நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சீனாவில் X70 சீரிஸை அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட 10 நாட்கள் கழிந்த பிறகு, விவோ தனது X70 சீரிஸை இந்தியாவில் செப்டம்பர் 30 அன்று லாஞ்ச் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்நிகழ்வுக்கான மைக்ரோ சைட்டை விவோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உருவாக்கி இருக்கிறது.
இந்த Vivo X70 சீரிஸில் 3 மாடல்கள் உள்ளன. அவை Vivo X70, X70 Pro மற்றும் X70 Pro+ ஆகும். இந்த ஸ்மார்ட் ஃபோன் சீரிஸ்கள் Zeiss T கோட்டிங் உடன் Zeiss ஆப்டிக்ஸை கொண்டிருக்கும் மற்றும் இரவு நேரங்களில் சிறந்த ஃபோடோக்களை எடுக்க உதவும் வகையில் அல்ட்ரா சென்சிங் ஜிம்பல் (ultra-sensing gimbal) கேமராவை பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Vivo X70 மாடல் ஸ்மார்ட் ஃபோன் 6.56-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. இந்த ஸ்மார்ட் ஃபோன் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
மேலும் இது 12GB ரேம் மற்றும் 256GB ஆன்-போர்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் பிரைமரி 40MP ஷூட்டருடன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது.
அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 12MP போர்ட்ரெய்ட் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபி கேமரா 32MP திறன் கொண்டது. இந்த போனில் 4,400mAh பேட்டரி உள்ளது. 44W ஃப்ளாஷ் சார்ஜ் & ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
Vivo X70-ன் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடல் சீனாவில் 3,699 யுவானுக்குவிர்ப்பக்காடு வருகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.42,100 ஆகும்.
இந்த ஃபோன் எக்ஸினோஸ் 1080 ப்ராசஸருடன் (Exynos 1080 processor) வருகிறது மற்றும் X70-ன் அதே டிஸ்ப்ளே சைஸ் அளவு மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்களை கொண்டுள்ளது.
இந்த டிவைஸ் 12GB ரேம் மற்றும் 512GB ஆன்-போர்ட் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 50MP பிரைமரி சென்சார், X70 போன்றே இரண்டு 12MP கேமராக்கள் மற்றும் 8MP பெரிஸ்கோப் லென்ஸ்களை கொண்ட குவாட் ரியர் கேமராசெட்டப்பை கொண்டுள்ளது.
செல்ஃபிக்காக இந்த டிவைஸின் முன்பக்கத்தில் 32MP திறன் கொண்ட ஷூட்டர் உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் 44W ஃப்ளாஷ் சார்ஜ் & ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 4,450mAh பேட்டரியை கொண்டுள்ளது.
Vivo X70 Pro-ன் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடலின் துவக்க விலை 4,299 யுவான். இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.48,957 ஆகும்.
Vivo X70 Pro+ ஸ்மார்ட் ஃபோன் 6.78-inch UHD+ AMOLED மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை சப்போர்ட் செய்ய கூடியது. இந்த டிவைஸ் அட்ரினோ 660 GPU உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 888+ ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
மேலும் 12GB ரேம் மற்றும் 512GB வரை ஆன்-போர்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி ஷூட்டர், 48MP வைட்-ஆங்கிள் கேமரா, 12MP போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 8MP பெரிஸ்கோப் கேமரா உள்ளிட்டவை அடங்கிய ஒரு குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
பெரிஸ்கோப் கேமரா 5x ஆப்டிகல் ஜூம், 60x சூப்பர்ஜூம் மற்றும் OIS ஐ சப்போர்ட் செய்யும். இந்த டிவைஸ் 5,000mAh பேட்டரியுடன், 55W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டிருக்கும்.
8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்ட X70 Pro+ மாடலின் சீன விலை 5,499 யுவான். இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.62,700 முதல் துவங்குகிறது.