பிஎஃப் உறுப்பினர்கள் இனி தங்கள் பேலன்ஸை மிஸ்டு கால், எஸ்எம்எஸ் மூலம் சரிபார்க்கலாம்.
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது.
மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும். பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது.
இந்நிலையில் பிஎஃப் உறுப்பினர்கள் இனி தங்கள் பிஎஃப் பேலன்ஸை மிஸ்டு கால் மூலம் சரிபார்க்கலாம். இந்த சேவையை புதிதாக தொடங்கியுள்ளதாக இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள இபிஎஃப்ஒ அமைப்பு, ” பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பேலன்ஸை நொடிகளில் அறிந்து கொள்வார்கள், இது ஒரு இலவச சேவை.
பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து உங்கள் PF இருப்பு விவரங்களைப் பெறுங்கள். ” என்று தெரிவித்துள்ளது.
இதுதவிர, பி.எஃப் உறுப்பினர்கள் தங்கள் பேலன்ஸை எஸ்எம்எஸ் மூலம் சரிபார்க்கலாம். முதலில், அவர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்கள் செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். PF உறுப்பினர்கள் ‘EPFOHO UAN LAN’ என்று டைப் செய்து பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் சரிபார்க்க விரும்பும் பிஎஃப் உறுப்பினர்கள், https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login என்ற இணையதளத்திலும் சரிபார்க்கலாம்.
UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டும். பின்னர் நீங்கள் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். இதன்பின்னர் உங்கள் பிஎஃப் பேலன்ஸ் குறித்த விவரங்கள் தெரியவரும்.
Get your #PF Balance details by just giving a missed call on 011-22901406 from registered mobile number.
— EPFO (@socialepfo) September 29, 2021
रेजिस्ट्रेड मोबाइल नंबर से 011-22901406 पर मिस्ड कॉल करें और पाएं अपने #पीएफ बैलेंस की जानकारी। #EPFO #EPF #SocialSecurity #Services pic.twitter.com/uSiYjSiTOX