December 8, 2024, 4:45 AM
25.8 C
Chennai

சரியான சாம்பார் தூள் தான் உபயோகிக்கிறிர்களா? தரம் பார்க்க வீடியோ வெளியிட்ட FSSAI!

masala powder
masala powder

இன்றைய காலகட்டத்தில், அசல் எது, போலியானது எது என கண்டுபிடிப்பதில் நமக்கு பெரும் சிக்கல் உள்ளது.

அரிசி, மாவு, நெய், பால், தயிர், எண்ணெய் முதல் பழங்கள் மற்றும் காய்கறிகள் வரை வாடிக்கையாளர்களுக்கு தரமான முறையில் கிடைப்பதில்லை. உணவுகள் காய்கறிகளை சீக்கரமாக அதிக அளவில் வளர்ப்பதற்கு பல்வேறு வகையான இரசாயனங்கள் பாரபட்சமின்றி பயன்படுத்தப்படுகிறது.

ஊசி மூலம் பழங்கள் பழுக்கவைக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல, இப்போது மசாலாப் பொருட்களும் கலப்படம் செய்யத் தொடங்கியுள்ளன.
அந்த காலத்தில் மிளகாய் தூள் அரைக்க அதை வெயிலில் காய வைத்து அரைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் இன்றைய அவசர காலம் அதற்கெல்லாம் நேரம் இல்லை. நேரடியாக கடையில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிலும் கெமிக்கல்கள் இல்லாத மிளகாய்த்தூள் தான் வாங்குகிறோமா என்றால் சந்தேகம்தான்.

இத்தகைய சூழ்நிலையில், FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) அரசு சார்பில் பல்வேறு வகையான உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

இதில், FSSAI குழு நடைமுறையில் உள்ள உண்மையான மற்றும் போலியான உணவு பொருட்களை அடையாளம் காட்டுகிறது. சமீபத்தில் FSSAI கலப்படமான சிவப்பு மிளகாய் பொடியை எப்படி அடையாளம் காண்பது என்று கூறியுள்ளது.

ALSO READ:  இலவச யோகா விழிப்புணர்வு முகாம்!

மேலும் “நீங்கள் வாங்கும் மிளகாய் தூளில் செங்கல் தூள் அல்லது மணல் கலப்படமா? எனவே உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டுபிடிப்போம்” எனத் தலைப்பிட்டு காணொளியை பகிர்ந்துள்ளது.

உண்மையான சிகப்பு மிளகாய் பொடியை அடையாளம் காண எஃப்எஸ்எஸ்ஏஐ மிகவும் எளிமையான முறையை பரிந்துரைத்துள்ளது. அதை நீங்கள் வீட்டிலும் செய்து உண்மைத்தன்மையை அறிந்துக்கொள்ளலாம். அதற்கு எந்த ஆய்வகமும் தேவையில்லை.

உண்மையான மற்றும் போலி மிளகாய் பொடியை அடையாளம் காண எளிதான வழி

  • முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை நிரப்பவும்.
  • இப்போது ஒரு ஸ்பூன் சிவப்பு மிளகாய் பொடியை தண்ணீரில் போடவும்.
  • இப்போது மிளகாய் பொடியை கரண்டியால் கிளற வேண்டாம், ஆனால் மிளகாய் தானாகவே தண்ணீரில் உள்ள கண்ணாடிக்கு கீழே போகட்டும்.
  • இப்போது உங்கள் உள்ளங்கையில் தண்ணீரால்ல் நனைத்த மிளகாய் பொடியை எடுத்து லேசாக தேய்க்கவும்.
  • தேய்த்த பிறகு கற்கள் போல நெருடல் இருப்பதாக உணர்ந்தால் அது கலப்படம்.
  • அதே நேரத்தில், ஊறவைத்த மிளகாய் தூள் மிகவும் மென்மையாகவோ இருந்தால், அதில் சோப்பு soap stone powder கலக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ:  கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு: லாரிகள் ஸ்டிரைக்.
author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...