உருகச் செய்யும் வீடியோ! அள்ள அள்ளக் குறையாத கள்ளமற்ற அன்பின் இருப்பிடம் குழந்தைகள்!

Published:

kids
kids

சமூக வலைதளங்களில் எப்போதும் குழந்தைகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக இரண்டு குழந்தைகள் ஒரே வீடியோவில் இருந்தால் அது நிச்சயம் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு குழந்தைகள் சேர்ந்த்து சேட்டை செய்வதற்கு பதிலாக தங்களுடைய அன்பை பறிமாறி கொள்கின்றனர். அப்படி என்ன செய்கிறார்கள் இருவரும்?

இந்த குழந்தைகளின் வீடியோவை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அழும் குழந்தை ஒன்றை மற்றொரு குழந்தை ஆறுதல் கூறுகிறது.

இந்த இரண்டு குழந்தைகளும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த சிறுவர்களின் அன்பு மற்றும் பாசம் நம்மை மிகவும் வியக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ தொடர்பான பதிவை செய்துள்ள அந்த நபர், ‘அன்பு என்பது மனிதர்களுடன் உள்ளே எப்போதும் இருப்பது. அதை யாரும் வெளியே இருந்து கற்று கொள்ள முடியாது. அது எப்போதும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் ஒரு உணர்வு.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

அன்பின் பெரிய பலமே அது பலரிடமும் வேகமாக பற்றி கொள்ளும் தன்மை தான். அந்தவகையில் இந்த இரண்டு சிறு குழந்தைகள் ஒருவருக்கொருவர் ஆறுதல் தெரிவித்து கொண்டு அன்பை பரிமாறி கொள்கின்றனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img