விமான பணியாளர் உடையில் உணவு பரிமாறும் ஊழியர்கள்! விமான ரெஸ்டாரன்ட்!

Published:

airplane 2
airplane 2

வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க ஒவ்வொரு நிறுவனமும் புதுமைகளை புகுத்தி வருகிறது.

அந்த வகையில் குஜராத்தில் வதோதராவில் விமானத்தை உணவகமாக மாற்றி வடிவமைத்துள்ளனர்.

இதற்காக பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஏர்பஸ்-320 ரக விமானம் ஒன்று விலைக்கு வாங்கப்பட்டது.

airplane 1
airplane 1

விமானத்தின் ஒவ்வொரு பாகமும் தனிதனியாக வதோதராவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உணவகமாக மாற்றி வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

restaurant
restaurant

இது குறித்து உணவக நிர்வாக இயக்குநர் முகி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

airplane restaurant
airplane restaurant

அதில் , ” இந்த உணவகத்துக்குள் வரும் போது, நிஜ விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். விமான உணவகத்தில் பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியன், மெக்சிகன், தாய், காண்டினெண்டல் வகையான உணவு வகைகள் கிடைக்கும்.

airplane hotel
airplane hotel

மேலும் இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு, விமானத்தில் இருப்பது போன்ற டிக்கெட்டும் வழங்கப்படும்.

airplane
airplane

ஒரே நேரத்தில் 106 பேர் வரை இங்கு அமர்ந்து சாப்பிட முடியும். இதன் ஊழியர்கள் அனைவரும் விமான பணியாளர்கள் உடையணிந்து பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img