அழிந்து போன போட்டோ, வீடியோ திரும்ப பெற..!

அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
whatsapp
whatsapp

2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் செயலி, தற்போது உலகளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் மிகப்பெரிய செய்தி பரிமாற்ற தளமாக திகழ்கிறது.

உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், அவ்வப்போது தனது பயனர்களுக்காக பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது..

வாட்ஸ் ஆப் போட்டோக்கள் அல்லது வீடியோக்கள் டெலிட் ஆகிவிட்டால், அதனை எப்படி மீட்டெடுப்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

டெலிட் ஆனதில் இருந்து 30 நாட்களுக்கு போட்டோக்கள் அல்லது வீடியோக்களை மீட்டெடுக்கலாம்.. ஏனெனில் ஒரு மாதத்திற்கு பிறகு வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்து தரவுகள் மறைந்துவிடும்.

ஒருவேளை வாட்ஸ் பயனாளர் ஒட்டுமொத்த chat-ஐயும் டெலிட் செய்யவில்லை எனில், குறிப்பிட்ட போட்டோவை மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்..

குறிப்பிட்ட chat-ஐ ஓபன் செய்து, நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் போட்டோ அல்லது வீடியோவை மீண்டும் சேமித்து கொள்ளலாம். ஆனால் டெலிட் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் மட்டும் போட்டோ அல்லது வீடியோவை மீட்டெடுக்க முடியும்.

எனினும் போட்டோக்கள் அல்லது வீடியோக்களை டவுன்லோடு செய்யும் போது, பலமுறை ‘can’t download. please ask the user to send the media files’ அதாவது டவுன்லோடு செய்ய முடியாது, மீண்டும் அந்த மீடியா பைல்-ஐ அனுப்ப சொல்லுங்கள் என்று மெசேஜ் வரும்.

இதுபோன்ற நேரத்தில் உங்கள் போனில் இண்டெர்நெட் வசதி சரியாக உள்ளதா என்பதையும், உங்கள் போனின் தேதி சரியாக உள்ளதாக என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில் தேதி தவறாக இருந்தால், வாட்ஸ் ஆப் சர்வர் உடனான தொடர்பில் சிக்கல் ஏற்படும்.. மேலும் போன் ஸ்டோரேஜ் நிறைந்துவிட்டாலும், வாட்ஸ் ஆப்-ல் கோளாறு வரும்..

இவை தவிர ஆண்டிராய்டு பயனாளர்கள் auto download என்ற ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இதன்மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் நேரடியாக உங்கள் போன் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும்.

அல்லது நீங்கள் சேமிக்க விரும்பும் புகைப்படத்தை தனித்தனியாக தேர்ந்தெடுத்து அவற்றை போன் ஸ்டோரேஜில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.