Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்திருடனை திருத்திய சாது!

திருடனை திருத்திய சாது!

horse 1
horse 1

ஸ்ரீ கிருஷ்ண பக்த சாது – சம்பந்தம் என்பவர் ஒரு மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.

அவனை அசைத்துப் பார்த்தார்.அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகட்டினார் சாது சம்பந்தம்.

மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார். குதிரை மீது உட்கார்ந்த மறு கணமே அவன் அந்த குதிரையின் கடி வாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் சாது சம்பந்தம்.

அப்போது தான் அவன் ஒரு பிரபல திருடன் சூரியபிரகாஷ் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.
Qகுதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டைஅடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.

அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் சூரியபிரகாஷ் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.
.
ஸ்ரீ கிருஷ்ண பக்த சாது – சம்பந்தம் மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் சூரியபிரகாஷ் பேயறைந்தது போல் நின்றான்.
சாது மெல்லச் சிரித்தார்.
உஷ்…..”சொல்லாதே!” என்றார்.

திருடன் சூரியபிரகாஷ் மிரண்டான்.”எது?
என்ன?” என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான் திருடன் சூரியபிரகாஷ் .
சாது சொன்னார்.
.
அய்யா பலே கில்லாடி…. என் குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால் நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. ஏனென்றால் மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.

நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை.
காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.

தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும். புரிகிறதா?”…
திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மனம் திருந்தி, திருட்டு தொழிலை கைவிட்டு பரந்தாமன் புகழ் பாட தொடங்கினார்

குறுகிய லாப/நோக்கங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது*.
எந்த தருணத்திலும் பரந்தாமன் பக்தர்களையும் நல்ல எண்ணம் கொண்டவர்களையும், நல்ல நட்பையும் இழந்து விடக்கூடாது

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
74FollowersFollow
74FollowersFollow
3,929FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

வரும் செப்டம்பர் 30இல் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இதற்கு ஒருநாள் முன்னதாக தனுஷ் நடித்த...

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த நடிகை ஊர்வி ஜாவித்..

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த பிரபல நடிகை ஊர்வி ஜாவித்திடம் ரசிகர்கள் பல...

Latest News : Read Now...