
மத பாகுபாடு காட்டி இந்து மத சின்னங்களை மட்டும் அவமரியாதை செய்யும் அரசு உதவி பெறும் கிறிஸ்துவ பள்ளிக்கு அரசு உதவிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டையில் பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி கிருத்துவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி. இந்த பள்ளியில் 12 ம் வகுப்பு பயிலும் கலைவாணி என்ற மாணவி எப்போதும் நெற்றியில் திருநீறு மற்றும் குங்கும்ப்பொட்டு வைத்து பள்ளிக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாணவி வழக்கம் போல் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமப் பொட்டு வைத்து பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் 2 பேரும், மேலும் 2 ஆசிரியர்களும் சேர்ந்து நெற்றியில் உள்ள இந்து அடையாளங்களை அழித்துவிட்டு பள்ளிக்கு வர வேண்டும் என்றும், உடனே அவற்றை அழிக்கும்படியும் வற்புறுத்தியும் மிரட்டியும் உள்ளனர். அந்த மாணவி அவ்வாறு அழிக்காததால் உடன் இருக்கும் மாணவியை வைத்து அழித்துள்ளனர்.

இந்தச் செயலால் பெருத்த அவமானமும் அவமரியாதையும் அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோர் மற்றும் ஊரார்களிடம் புகார் கூறியுள்ளார். இதை அடுத்து இந்து முன்னணி அமைப்பினரிடம் ஊரார் உதவி கோரினர். இதை அடுத்து, இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பின் தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, ஆலங்குளம் ஒன்றிய பாஜக., பொறுப்பாளர் கந்தசாமி மற்றும் ஊர்ப் பொதுமக்கள் பலர் மனு கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அரசின் மூலமாக கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மை இந்துக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப்பள்ளியில் கிறிஸ்தவ மதத் திணிப்பு ஒருபுறம் நடக்கிறது என்றால், மறுபுறம் ஹிந்து மத அடையாளங்களை அவமரியாதை செய்து, மாணவ மாணவிகளை மத ரீதியாக துன்பப் படுத்துவதும் நடக்கிறது. எவர் அளிக்கும் பணத்தில் தினந்தோறும் சோறு உண்கிறார்களோ அவர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்கள் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் சாத்தானின் செயலைப் போன்றது என்றும், ஆசிரியர்கள் சாத்தானின் அடிமைகளாக மாறுவது அவர்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவ மதத்துக்கே செய்யும் துரோகம் என்றும் அவர்கள் கூறினர்.