
உலகம் முழுவதும் கூகுளின் பல வகையான செயலிகளை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய கூகுள் மேப்ஸ் முதல் க்ரோம் வரை மக்கள் கூகுளின் சேவைகளையே சார்ந்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் ஒன்றோடொன்று தொடர்புடைய செயலிகள் மற்றும் அதன் சேவைகள், அதிக அளவிலான தனிநபர் தகவல்களை கொண்டுள்ளது. உங்களின் தேடல் வரலாறு, மொபைல் லொக்கேஷன் போன்றவை இவற்றில் அடங்கும்.
தனது யூசர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க கூகுள் நிறுவனம் இருப்பிடத்தின் தரவுகளை (லொக்கேஷன் டேட்டா) பயன்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு, இருப்பிடம் சார்ந்த தேடல் முடிவுகள், நிகழ்நேர போக்குவரத்தை கண்காணித்தல், உங்கள் புகைப்படங்களின் இருப்பிட தரவுகள் மற்றும் பலவற்றை சொல்லலாம்.
கூகுளின் லொக்கேஷன் ட்ராக்கிங் மூலம் அதன் சேவைகளை பெரிய அளவில் மேம்படுத்தினாலும், தனியுரிமை காரணமாக யூசர்கள் இந்த வசதியை முடக்க வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில், உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை கூகுள் கண்காணிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் அதை எளிதாக முடக்கலாம். இதைப் பற்றி அறிய மேலும் படியுங்கள்.,
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் எல்லா செயலிகளிலும் லொக்கேஷன் ட்ராக்கரை ஆப் செய்யும் வழிமுறை :
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் “செட்டிங்ஸ்” ஓபன் செய்யவும்
அதில் “லொக்கேஷன்” என்பதை கிளிக் செய்யவும்
இந்த பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள பட்டனை இடதுபக்கமாக ஸ்வைப் செய்க. இப்படி செய்வதால் இந்த ஆப்ஷன் ‘ஆஃப்’ செய்யப்படும்.
குறிப்பு: லொக்கேஷன் ட்ராக்கிங்கை முடக்கினால், உங்கள் மொபைலில் உள்ள ஒவ்வொரு செயலிகளின் இருப்பிடத் தரவை அனுப்புவது அல்லது பெறுவது நிறுத்தப்படும்.
கூகுள் அக்கவுண்ட் மூலமும் நீங்கள் உங்களின் லொக்கேஷன் ஹிஸ்டரி வசதியை முடக்க முடியும். இதை செய்வது மூலம், உங்கள் மொபைலில் உள்ள ஒவ்வொரு செயலிகளின் லொக்கேஷன் ட்ராக்கிங்கை ஒரே ஸ்வைப்பில் முடக்கலாம்.
கூகுளில் ‘லொக்கேஷன் ஹிஸ்டரி’ ட்ராக்கிங்கை முடக்கும் வழிமுறை
- உங்கள் மொபைலில் “செட்டிங்ஸ்” ஓபன் செய்து, “கூகுள்” என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு ‘மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட்’ என்பது தேர்தெடுக்கவும்.
- உங்களின் அக்கவுண்ட் பக்கத்திற்கு சென்ற பின் “பிரைவசி & பெர்சனலிஷேசன்” என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் ஆக்டிவிட்டி கன்ட்ரோல் பிரிவில், ” லொக்கேஷன் ஹிஸ்டரி” என்பதை கிளிக் செய்யவும்.
- இந்த லொக்கேஷன் ஹிஸ்டரியை இடதுபக்கமாக ஸ்வைப் செய்து ஆஃப் செய்யவும்.
மேற்கண்ட வழிமுறையை பயன்படுத்தி உங்கள் போனில் லொக்கேஷனை ஆப் செய்து வைப்பது நல்லது.