கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மட்டும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2017 கணக்கெடுப்பின் படி 80000 வளர்ப்பு நாய்கள் இருந்தன. இதனையடுத்து நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
ஆனால் தற்போதைய நிலவரத்தின் படி வீட்டில் வளர்த்து வரும் நாய்களுக்கு வயதாகிவிட்டாலோ, உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ அவைகளை வீதிகளில் விட்டு விடுகின்றனர். இதனால், ஆங்காங்கே சாலைகளில் வளர்ப்பு நாய்கள் உயிரிழந்து கிடக்கின்றன.
அதே போல் நடைபாதைகளில் நாய்கள் இயற்கை உபாதை கழிப்பதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகின்றன.
இதனை கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 15 க்குள் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவேண்டியது அவசியம்.
அலுவலகம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டிற்கு ஒரு நாய் மட்டுமே வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாய்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்.
இந்திய நாய்களுக்கு மைக்ரோசிப் மட்டும்பொருத்தினால் போதுமானது. சாலை ஓரங்களில் நாய்கள் இயற்கை உபாதைகளை கழிக்க செய்தால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.