
பண்டைய காலகட்டத்தில் தமிழ் பெண்கள் முறத்தை வைத்து புலியை விரட்டினார்கள் என்று பல இலக்கியங்களில் படித்திருப்போம்
காரணம் அந்த அளவுக்கு தமிழக பெண்கள் வீர, தீரத்துடன் இருந்தார்கள் என்பதற்கு அப்படி சொல்லப்படுவதுண்டு.
அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் தனது செருப்பை காட்டி முதலையை விரட்டியுள்ளார். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் காகாடு தேசிய வனப் பூங்காவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. நீர்நிலையின் கரையில் இந்த பெண் நிற்கிறார். அப்போது முதலை ஒன்று தண்ணீல் அவரை நோக்கி வருகிறது.
அப்போது அந்த பெண் தனது செருப்பை கழட்டி ஒலி எழுப்பியதும் அந்த முதலை அங்கிருந்து ஓடி விடுகிறது. இந்த வீடியோ பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.