
மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பது என்றால், பேப்பரில் பிட் எழுதிக் கொண்டு சென்று பார்த்து எழுதி வந்தனர்.
அதன் பின்னர் தன் நண்பர் எழுதி பேப்பரை வாங்கி எழுதி வந்தனர்.
ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தால், பல விதமாகக் காப்பியடிக்கத் துவங்கி விட்டனர்.
இதை பார்த்த அனைவரும் இப்படி கூட தொழில்நுட்பத்தை உபயோகிக்கலாமா என்று வியந்த வண்ணம் உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஹின்ஜெர்வாடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சமீபத்தில் அம்மாநில போலீஸ் கான்ஸ்டேபிள் பணிக்கான தேர்வு நடந்தது.
இந்த தேர்விற்கு வந்தவர்களைச் சோதனையிட்ட போது அவர் அணிந்த வந்த மாஸ்க்கில் சிம்கார்டு, பேட்டரி, ஸ்விட்ச், மைக், எனச் சகலமும் பொருத்தப்பட்ட ஒரு தொழிற்நுட்பத்தை அணிந்து வந்திருந்தார்.
அதன் மூலம் போன் பேசி வெளியிலிருந்து அவருக்குப் பதில்களைச் சொல்லிக் கொடுக்க முடியும்.போலீசார் இதைப் பிடித்ததும் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.
இந்நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே போலக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் செருப்பில் ப்ளூடூத் கருவி வைத்துத் தயாரிக்கப்பட்ட செருப்பை வைத்துக் காப்பியடிக்க முயன்ற போது சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“https://twitter.com/ANI/status/1462095201858560004?ref_src=twsrc%5Etfw