
தற்போது நாட்டில் ஏறக்குறைய அனைவரும் பான் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது அதை சாதாரண குடிமகனுடன் வைத்திருப்பது அவசியமாகிவிட்டது
இத்தகைய சூழ்நிலையில், வங்கி உட்பட பல இடங்களில் பான் அட்டை தேவை உள்ளது. ஆனால் பான் அட்டை பயன்படுத்தும் போது நீங்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனெனில் நீங்கள் தவறுதலாக PAN தொடர்பான ஏதேனும் தகவலை கொடுத்து இருந்தால், நீங்கள் ரூ 10000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். பத்து இலக்க பான் எண்ணை மிகவும் கவனமாக நிரப்ப வேண்டும்.
இதில் ஏதாவது எழுத்து பிழை இருந்தால் நீங்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம். இது தவிர, நீங்கள் இரண்டு பான் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதிக அபராதம் செலுத்த வேண்டும். எனவே பான் அட்டை குறித்து எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
இல்லையென்றால், வருமான வரித்துறை உங்கள் பான் கார்டை பெரிய அபராதத்துடன் ரத்து செய்யலாம். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால், உங்கள் வங்கிக் கணக்கை முடக்கலாம். உங்களிடம் இரண்டு பான் கார்டு இருந்தால் உடனடியாக வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 272B இன் கீழ், தவறான பான் கார்டு தகவலைக் கொடுப்பவருக்கு ரூ. 10,000 அபராதம் வருமான வரித்துறை விதிக்கலாம். ஐடிஆர் படிவத்தை நிரப்பும்போது அல்லது பான் கார்டு விவரங்களை உள்ளிட வேண்டிய பிற சந்தர்ப்பங்களில் இந்த விதிமுறை பொருந்தும்.
சில சமயங்களில் என்ன நடக்கிறது என்றால் மக்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த பான் கார்டு அவர்களுக்கு கிடைக்காதபட்சத்தில் அல்லது அதுக்குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத போது, அவர்கள் மற்றொரு PAN கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், இரண்டு கார்டு அவர்களிடம் வருகின்றன. அதுவும் ஒரு பெயர், ஒரே முகவரியில் இருக்கிறது. ஆனால் இரண்டு அட்டையிலும் பான் எண் வேறுபட்டவையாக இருக்கும். வருமான வரித்துறையை பொறுத்த வரை இது ஒரு பெரிய குற்றமாகும்.
வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 272B இன் கீழ், உங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். எனவே ஒருவருடைய பெயரில் இரண்டு பான் கார்டு வந்திருந்தால், அவர் ஒரு அட்டையை வருமான துறைக்குத் திருப்பித் தர வேண்டும்.
இரண்டாவது பான் கார்டை திருப்பித் தர ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் இரண்டையும் பின்பற்றலாம். பான் அட்டையை திரும்ப அனுப்ப பொதுவான படிவங்கள் உள்ளன. இதை வருமான வரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
இணையதளத்தில் உள்ள புதிய PAN அட்டைக்கான கோரிக்கை அல்லது/ மற்றும் PAN தரவு இணைப்பில் மாற்றங்கள் அல்லது திருத்தம் ஆகியவற்றைக் கிளிக் செய்தால் படிவம் பதிவிறக்கம் செய்யப்படும்.
இதன் பிறகு படிவத்தை பூர்த்தி செய்து எந்த NSDL அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். இரண்டாவது பான் கார்டை ஒப்படைக்கும் போது, அதை படிவத்துடன் சமர்ப்பிக்கவும். இது ஆன்லைனிலும் சாத்தியமாகும்.