
ஆதார் கார்டு குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விடைகளும்.
கேள்வி : ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் ரீபிரிண்ட் எடுக்க முடியுமா?
பதில் : கண்டிப்பாக முடியும். UIDAI அதற்கான வசதியை செயல்பாட்டில் வைத்துள்ளது. UIDAI தளத்தில் வழக்கம் போலவே இதற்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ. 50
கேள்வி : ஆதார் ஆப்பை இயக்க உரிமம் பெறுவது எப்படி?
பதில் : 1947 என்ற எண்ணுக்கு பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து உரிமம் கேட்டு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். அதன் பின்பு உங்களால் ஆதார் ஆப்பை எளிமையாக பயன்படுத்த முடியும்.
கேள்வி: ஆதாரில் முகவரியை அப்டேட் செய்ய ஆவணங்கள் இல்லை என்றால் என்ன செய்வது?
பதில் : ஆவணங்கள் ஏதும் இல்லாத போதும் உங்களால் ஆதாரில் முகவரி அப்டேட் செய்ய முடியும். அதற்கு UIDAI தளத்தில் முகவரி சரிப்பார்த்தல் கடிதத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். பின்பு இந்த கடிதத்தை பெற்றவுடன் அதை வைத்து ஆதாரில் தற்போதைய முகவரியை அப்டேட் செய்யலம்.
கேள்வி: ஆதாரில் பெயரை மாற்ற வேண்டும். இதற்கு இ-சேவை மையத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் சுயமாக அப்டேட் செய்ய முடியுமா?
பதில் : முடியாது. வீட்டு முகவரி அப்டேட் மட்டும் தான் உங்களால் செய்ய முடியும். பெயர் மாற்றம், பாலினம், வயது, புகைப்படம் மாற்றத்திற்கு கண்டிப்பாக இ-சேவை மையம் அல்லது ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
கேள்வி: ஆதார் கார்டு எத்தனை ஆண்டுகள் செல்லுபடியாகும்?
பதில் : வாழ்நாள் முழுவதும் நீங்கள் எந்த இடத்திலும் ஆதார் கார்டை பயன்படுத்தலாம்.
கேள்வி : இ -ஆதார் மற்றும் ஆதார் கார்டு இரண்டும் ஒன்றா?
பதில் : இரண்டும் ஒன்று தான். இ – ஆதார் என்பது டிஜிட்டல் வெர்ஷன். ஆன்லைனில் டவுன்லோட் செய்வது. ஆதார் கார்டு என்பது போஸ்ட் வழியாக முகவரிக்கு வந்து சேரும் ஆவணம்.
கேள்வி: ஆதார் கார்டில் இருக்கும் QR கோடில் என்னென்ன தகவல்கள் இருக்கும்?
பதில் : பெயர், முகவரி, வயது, பாலினம் என உங்களை பற்றி ஆதாரில் இருக்கும் அனைத்து தகவல்களும் இந்த QR கோடில் இருக்கும்.
கேள்வி: ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமா?
பதில் : ஆம். நிதியமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி ஆதார் கார்டை, பான் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும்.
கேள்வி : ஆதார் சேவை மையத்திற்கு ஒரிஜினல் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டுமா?
பதில் : ஆம். முகவரி மாற்றம், பெயர் மாற்றம், வயது மாற்றம், பாலின மாற்ற அனைத்திற்கும் ஒரிஜினல் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். சேவை அதிகாரி அதை ஒருமுறை சரிபார்ப்பார்.
கேள்வி: ஆதார் கார்டு அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் விண்ணப்பிக்கலாமா?
பதில் : பொதுவாக நெட்வொர்க் , சர்வர் பிரச்சனையால் தான் ஆதார் கார்டு அப்ளிகேஷன் நிராகரிக்கப்படும். தாராளமாக மீண்டும் விண்ணப்பிக்கலாம்.