April 18, 2025, 12:38 PM
32.2 C
Chennai

சகலத்தையும் அருளும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்தோத்திரம்!

narasimmar
narasimmar

அதி சக்தி வாய்ந்த
ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர்
மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம் ||

1.உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்.

பொருள்:
கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரஸிம்மரை நான் வணங்குகிறேன்.

2.வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!
நிநாதத் ரஸ்த விஷ்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்.

பொருள்:
பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

3.ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலோகம் திதே ஸுதம்!
நகாக்ரை சகலீ சக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்

பொருள்:
திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.

4.பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ் டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திஸம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்

பொருள்:
விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரஸிம்மரை நான் வணங்குகிறேன்.

ALSO READ:  பாலமேடு அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம்!

5.ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

பொருள்:
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

6.ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
ஜாநாதி யோ நமாம் யாத்யம்
தமஹம் ஸர்வதோ முகம்

பொருள்:
சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

7.நரவத் ஸிம்ஹ வச்சைவ
ரூபம் யஸ்ய மஹாத்மநஹ!
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்

பொருள்:
பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரஸிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்..

8.யந்நாமஸ் மரணாத் பீதாஹ
பூத வேதாள ராக்ஷஸாஹ
ரோகாத் யாஸ்ச ப்ரணஷ் யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்

பொருள்:
உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

ALSO READ:  அலங்காநல்லூர் - கோவிலூரில் உச்சி மாகாளியம்மன் உத்ஸவ விழா!

9.ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மஷ்நுதே!
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்

பொருள்:
அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

10.ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்த்யும்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யோர் ம்ருத்யோ நமாம்யஹம்

பொருள்:
மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்கு பவருமான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

11.நமஸ்காரத் மகம் யஸ்மை
விதாயாத்ம நிவே தநம்!
த்யக்ததுக் கோகிலாந் காமாந்
அச்நுதேதம் தம் நமாம்யஹம்

பொருள்:
எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரஸிம்மரை வணங்குகிறேன்.

12.தாஸபூதா ஸ்வதஸ் ஸர்வே
ஹ்யாத்மாந பாமாத்மநஹ!
அதோஹமபி தே தாஸந:
இதி மத்வா நமாம்யஹம்

பொருள்:
இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரஸிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.

ALSO READ:  சபரிமலையில் விஷு பண்டிகை: கனி கண்ட பக்தர்களுக்கு கைநீட்டம் பிரசாதம்!

13.சங்கரேணா தராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ் ஸ்ரீஸ்ட வர்த்ததே.

பொருள்:
ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.

இந்த அதி சக்தி வாய்ந்த
ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரத்தை ஸ்ரீநரஸிம்மர் அவதரித்த ஒவ்வொரு ஸ்வாதி நட்சத்திரத்திலும் அஷ்டமியிலும் அல்லது ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் அல்லது அதிகாலை நேரத்தில் அதாவது ப்ரம்ஹ முகூர்த்தத்தில் 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் 108 அல்லது 18 முறை பாராயணம் செய்தால் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளும் சரியாகும்.
சகல செளபாக்யமும் கிடைக்கும்.
பாராயணம் முடிந்து மோர் பானகம் சர்க்கரைப் பொங்கல் தூபம் தீபம் காட்டி சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து பாருங்கள்.

ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் பக்த ப்ரஹல்லாதருக்காக தூணில் இருந்து நேரம் காலம் பார்க்காமல் உடனே அவதரித்தவர்.

அதனால் நீங்கள் என்ன நினைத்தாலும் அது ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் அருளால் உடனே பலிதமாகும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories