
இந்திய ராணுவம் தனது பணியாளர்களுக்கு அதிக ஆறுதல் மற்றும் நிலைத்தன்மையை வழங்கும் நோக்கில் புதிய போர் சீருடையை உருவாக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ராணுவ தின அணிவகுப்பின் (Army Day Parade) போது புதிய சீருடை அணிந்து வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்.
கடற்படை வீரர்களுக்கு கடந்த ஆண்டுதான் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, இந்த புதிய டிஜிட்டல் சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது.
மாறுபட்ட தட்பவெட்ப நிலைகளிலும், காடு, மலை, பனி என பல்வேறு இடங்களிலும் பணியாற்றும் வீரர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எல்லா பருவங்களிலும் அணிவதற்கு ஏற்றதாகவும் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே 2022, ஜனவரி 15ஆம் தேதியன்று ராணுவ தின அணிவகுப்ப்பில் (Army Day Parade) வரலாற்றில் முதன்முறையாக, ராணுவ தின அணிவகுப்பு நவீன காலகட்டத்தின் சீருடையைக் காணும். சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் ராணுவத்தின் சீருடையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் புதிய சீருடை அமெரிக்க ராணுவத்தின் துருப்புக்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் வடிவில் இருக்கும். “மாற்றப்பட்ட சீருடை, முன்பு இருந்ததைவிட சிறப்பாக உள்ளது” என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“துணை ராணுவப் படைகளுக்கும் (paramilitary forces), ராணுவத்திற்குமான சீருடைகளில் வித்தியாசம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதை பல முறை வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம்” என்று மூத்த அதிகாரி ஒருவர்கூறினார்.
ராணுவத்தின் புதிய சீருடையில், சட்டையை, கால் சராய்க்குள் வீரர்கள் சொருகி ‘டக்-இன்’ (will not have to tuck-in the dress) செய்ய வேண்டியதில்லை. புதிய சீருடையில், ஆடையின் கீழ் பெல்ட் இருக்கும்.
ராணுவத்தினரின் வசதியையும், அவர்கள் பணிபுரியும் கடினமான சூழ்நிலைகளையும் மனதில் கொண்டு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறினார்.
இதுவரை ராணுவ தின அணிவகுப்பு மற்றும் குடியரசு தின அணிவகுப்பில் ராணுவ வீரர்கள் பல்வேறு படைப்பிரிவுகளுக்கு ஏற்ப, அவற்றின் பிரத்யேக சீருடைகளை அணிந்து கொண்டு அணிவகுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.