அடுக்கு மாடியில் பற்றிய தீ.. சாதுர்யமாக தப்பிய சிறுவர்கள்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
fire - 2026

அமெரிக்காவில், இரு டீன் ஏஜ் சிறுவர்கள், தீ விபத்தில் இருந்து சாதுர்யமாக் செயல்பட்டு தப்பித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், கட்டிடம் தீப்பிடித்து எரிவதைக் காணலாம். அந்த பெரும் தீயில் சிறுவர்கள் இருவரும் எப்படியாவது தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கின்றனர். இந்த சம்பவம் நியூயார்க்கில் நடந்ததாக கூறப்படுகிறது.

வைரல் வீடியோவில் (Viral Video), மிக உயரமான அந்த கட்டிடத்தின் ஜன்னலில் ஒரு சிறுவன் வெளியே தொங்குவதைக் காணலாம். சிறிது நேரம் கழித்து மற்றொரு நபரும் ஜன்னலில் இருந்து வெளியே வருவதைக் காணலாம்

ஜன்னலை ஒட்டிய கம்பத்தை பிடிக்கிறார். இரண்டு சிறுவர்கள் எந்த மீட்புக் குழுவினருக்காகவும் காத்திருக்காமல் கம்பத்தின் உதவியோடு கீழே இறங்குகிறார்கள்.

சிறுவர்கள் இருவரும் மிகவும் சாதுர்யமாக கட்டிடத்திலிருந்து கீழே இறங்குகிறார்கள், ஆனால் அவர்களுக்கு சில காயங்கள் ஏற்படுகின்றன. ஒரு சிறுவனுக்கு 13 வயது என்றும் மற்றொருவருக்கு 18 வயது என்றும் கூறப்படுகிறது.

குட்நியூஸ் நிருபர் என்ற ட்விட்டர் கணக்கில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “2 சிறுவர்களில் ஒருவருக்கு 13 வயது மற்றவருக்கு 18 வயது.

நியூயார்க் நகரின் கிழக்கு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதை இதில் காணலாம். ஒரு சிறுவன் ஜன்னலில் தொங்குவதையும், மற்றொருவன் கம்பத்தில் தொங்கியபடி உதவி செய்வதையும் வீடியோவில் காணலாம்.”

தீ மளமளவென அதிகரித்து சிறுவர்கள் இருவரும் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்குவதை வீடியோவில் மேலும் காணலாம். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் வியாழன் காலை 7 மணியளவில் கிழக்கு கிராமத்தில் உள்ள ஜேக்கப் ரைஸ் ஹவுஸில் 118 அவென்யூ D இல் நடந்ததாக கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் பைக்கில் இருந்து லித்தியம் அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையில், மற்றொரு பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர தீயணைப்பு துறை (FDNY) தெரிவித்துள்ளது.

டிசம்பர் 17 அன்று பகிரப்பட்ட வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் சிறுவர்களை தைரியமானவர்கள் என்றும், அவர்களுக்கு உதவி செய்ய ஓடியவர்களை பாராட்டியுள்ளனர். சில பயனர்கள் தாங்கள் மீட்கப்பட்டதாக கூறி நிம்மதி பெருமூச்சு விட்டனர்

சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவுக்கு பயனர்கள் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.