ஜிப் எலக்ட்ரிக் (Zypp Electric) நிறுவனம் தன்னிச்சையாக இயங்கும் எலக்ட்ரிக் டெலிவிரி வாகனத்தை ஃப்ளோ மொபைலிட்டி (Flo Mobility) நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
குர்க்ராமை சேர்ந்த, எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை சேவை மூலமாக கொண்டுவரும் நிறுவனமான ஜிப் எலக்ட்ரிக் பெங்ளூரை சேர்ந்த ஃப்ளோ மொபைலிட்டி உடன் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த தானியங்கி எலக்ட்ரிக் டெலிவிரி வாகன சேவையினை முதலாவதாக தலைநகர் தில்லி என்சிஆர் பகுதியில் துவங்கவுள்ளது.
சிறிய தானியங்கி வாகனங்களில் கேமிராக்களை பொருத்தி இயக்கி பார்க்கும் முற்றிலும் கேமிராவை சார்ந்த நிறுவனமாக விளங்கும் ஃப்ளோ மொபைலிட்டி நிறுவனம் வேளாண் சார்ந்த தொழிற்நுட்பங்களை கண்டறியும் நிறுவனமாகவும் விளங்குகிறது.
மேலும் ஃப்ளோ மொபைலிட்டி நிறுவனம் தற்சமயம் இந்தியா முழுவதும் மற்றும் மேற்காசியா நாடுகள் & ஐரோப்பிய நாடுகளிலும் விமானி ஆகுவதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இந்த கூட்டணியின் மூலம் தயாரிக்கப்பட உள்ள தானியங்கி எலக்ட்ரிக் டெலிவிரி வாகனங்கள் தில்லி என்சிஆர் பகுதியில் ஜிப் எலக்ட்ரிக்கின் டெலிவிரி சேவைகள் உள்ள வணிக வளாகங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.
போதிய அளவிற்கு பொருட்களை வைத்து செல்லும் வகையில் பெரிய பெட்டகத்துடன், சிறிய சக்கரங்களில் இயங்குவது போன்றதான வடிவமைப்பில் இவை தயாரிக்கப்பட உள்ளன என்பது படங்களில் இந்த தானியங்கி இ-வாகனத்தை பார்க்கும்போது தெரிகிறது.
இந்த சேவை செயல்பாட்டிற்கு வந்தால், தில்லி என்சிஆர் பகுதியில் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் கூட்டணி வைத்துள்ள வணிக வளாகங்களின் பொருட்கள் ஆள் இல்லாமல் வெறும் வாகனத்துடன் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு செல்லும்.
வாகனத்தின் பாதுகாப்பிற்காகவும், பொருட்களின் பாதுகாப்பிற்காகவும் வாகனத்தை சுற்றிலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஃப்ளோ மொபைலிட்டி தயாரிக்கவுள்ள இந்த கேமிராக்கள் இந்த தானியங்கி எலக்ட்ரிக் வாகனத்தை எந்தவொரு மனிதரின் தலையீடும் இல்லாமல் வணிக வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வும், துணை நிறுவனமருமான ஆகாஷ் குப்தா கருத்து தெரிவிக்கையில், “சிறிய வாகனங்களுக்கான இந்தியாவின் முன்னணி தானியங்கி தொழிற்நுட்ப தீர்வு நிறுவனமான ஃப்ளோ மொபைலிட்டி உடனான எங்கள் கூட்டணியை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஜிப் எலக்ட்ரிக் பல்வேறு இடங்களில் உணவு விநியோகத்தை மென்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் செய்ய எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
இந்த தானியங்கி இ-வாகனங்கள் ஜிப் எலக்ட்ரிக் இ-ஸ்கூட்டர் சேவையை தேவைக்கேற்ப மாற்றியமைத்து கொள்ளவும் உதவும்.
ஜிப் எலக்ட்ரிக் மற்றும் ஃப்ளோ மொபைலிட்டியின் கூட்டணி லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்” என்றார்.
ஜிப் எலக்ட்ரிக் உடன் கூட்டணி வைத்துள்ளது குறித்து ஃப்ளோ மொபைலிட்டி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனரும், துணை நிறுவனருமான மனேஷ் ஜெயின் கருத்து தெரிவிக்கையில், ஃப்ளோ மொபைலிட்டி ஆனது மொபைலிட்டி மற்றும் லாஸ்ட்-மைல் டெலிவிரி உள்ளிட்ட சேவைகளில் தன்னை உட்படுத்தி கொண்டுள்ளது.
லாஸ்ட்-மைல் டெலிவிரி மற்றுல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயன்பாட்டை கொண்டு வருவதில் ஜிப் எலக்ட்ரிக் முன்னிலையில் உள்ளது.
இந்த கூட்டணியின் மூலம், டெலிவிரி நபர் செல்லும் அளவிற்கு தேவை இல்லாத பகுதிகளில் டெலிவிரி சேவையினை தானியக்கமாக்குவதன் மூலம் ஏற்றுமதி & இறக்குமதி சேவைகளை சற்று மாற்றவுள்ளோம்.
10 நிமிட டெலிவிரி வாக்குறுதிகளுடன், மனித பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், டெலிவிரி சேவையில் உள்ள மந்தநிலையை நீக்குவதும் மிகவும் முக்கியமானது.